search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஜூனியர் தடகளம்"

    • முன்பு 2021-ம் ஆண்டு அமித் சவுத்ரி 5 நிமிடம் 28.28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.
    • பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.

    கோவை:

    தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 38-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    16 வயதுக்குட்பட்ட 2 ஆயிரம் மீட்டர் ஆட்டத்தில் அரியானா வீரர் நிஷாந்த் 5 நிமிடம் 27.02 வினாடியில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு அமித் சவுத்ரி 5 நிமிடம் 28.28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

    ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக வீரர்கள் மொத்தம் 170 புள்ளிகளை குவித்தனர். பெண்கள் பிரிவில் அரியானா 244 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அரியானா கைப்பற்றியது. அந்த அணி 411 புள்ளிகளை பெற்றது. தமிழ்நாடு 362 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், உத்தர பிரதேசம் 238 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

    பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார். 

    ×