என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டாசு கழிவு"
- மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் மேற்பார்வையில் 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் இரவு பகலாக அகற்றப்பட்டன.
- மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 62 பேர் இந்த பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.
சென்னை:
சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்து உள்ளது. சனிக்கிழமை இரவு தொடங்கி இன்று காலை வரை பட்டாசு வெடித்து கொண்டாடியதில் சாலைகள், தெருக்களில் தேங்கிய கழிவுகளை சேகரிக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற் கொண்டது.
பட்டாசு கழிவுகள் மிக ஆபத்தானது என்பதால் அதனை மற்ற குப்பைகள் போல் சேகரித்து அகற்றாமல் அதற்காக தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு அக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் மேற்பார்வையில் 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் இரவு பகலாக அகற்றப்பட்டன. 3 நாட்களில் இருந்து 250 டன் மெட்ரிக் பட்டாசு குப்பைகள் அகற்றட்டன.
இது குறித்து கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5750 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பட்டாசு கழிவுகள் அபாயகரமாக இருப்பதால் அதனை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பட்டாசு கழிவுகள் அபாய கரம் என்பதால் தனியாக சேரித்து செயல்முறை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீட்டில் உள்ள பட்டாசு கழிவுகள் தனியாகவும், தெருவீதிகளில் உள்ள கழிவுகளை தனியாகவும் பைகளில் சேகரித்து மண்டலத்திற்கு ஒரு இடத்தில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்ற தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பட்டாசு குப்பைகள் தெரு பகுதிகள், சாலைகளில் தேங்கி கிடப்பதை உடனடியாக அகற்றி நகரை சுத்தமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் விடிய விடிய ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 62 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவதை சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள அக்கறையில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.
- தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- 30 தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு கழிவுகளை கொண்டு செல்ல மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் தனியாக கொடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்