search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடிகன்"

    • கடவுள் ஆணையும் பெண்ணையும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார்.
    • அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது தன்னைக் கடவுளாக்க முயற்சிக்கக்கூடாது.

    பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், பாலின கொள்கை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் தெரிவித்துள்ளது.

    மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை ஆகியவை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறுவதாகும்.

    கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட கண்ணியம் தொடர்பான அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    பாலின கோட்பாடு அல்லது ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்பதை தொடர்ந்து கடுமையாக நிராகரித்து வருகிறது. கடவுள் ஆணையும் பெண்ணையும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார். அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது தன்னைக் கடவுளாக்க முயற்சிக்கக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எந்தவொரு பாலின மாற்ற தலையீடு, விதிப்படி கருத்தரித்த தருணத்திலிருந்து நபர் பெற்ற தனித்துவமான கண்ணியத்தை அச்சுறுத்துகிறது.

    • போப் பிரான்சிஸ் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • இதனால் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ரோம்:

    போப் பிரான்சிஸ் (87) லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லேசான காய்ச்சல் காரணமாக போப் பிரான்சிஸ் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது அன்றாட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கிறிஸ்தவர்கள் ஆறுதல் அடைந்துள்ளதோடு விரைவில் உடல்நலம் பெற பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிசுக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • போப் பெனிடிக்ட் அவர்களால் பிஷப் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் ஜோசப்
    • கடவுள் தந்த அடையாளங்களை சிதைக்கப்படுவதாக ஜோசப் குற்றம் சாட்டினார்

    சமீப காலமாக, கிறித்துவ மதத்தில் தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு பல சட்ட திட்டங்களை மாற்ற போப் பிரான்சிஸ் தீவிரமாக உள்ளார்.

    கருக்கலைப்பு, தன்பாலின திருமணம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஞானஸ்நானம் செய்விப்பது போன்றவை குறித்த கிறித்துவ மத சம்பிரதாயங்களில் போப் பிரான்சிஸ் பல மாறுதல்களை கொண்டு வர முயன்று வருகிறார். வாடிகனின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

    2012ல் போப் பெனிடிக்ட் அவர்களால் பிஷப் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு (65). அவர் போப் பிரான்சிஸ் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தார்.

    கத்தோலிக்க சித்தாந்தம் பல எதிர்ப்புகளை சந்திப்பதை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.

    ஆண்'மற்றும் பெண் ஆகிய இருவருக்கிடையே மட்டுமே ஏற்பட வேண்டிய திருமண பந்தத்தை சீர்குலைக்கும் விதமாகவும், கடவுள் கொடுக்கும் அடையாளங்களை சிதைக்கும் விதமாகவும், மாற்ற முடியாதவற்றை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும் ஜோசப் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து வாடிகன் விசாரணைகளை நடத்தி, அவரை பதவி விலக வலியுறுத்தியது. ஆனால், இதற்கு உடன்பட ஜோசப் மறுத்து விட்டார்.

    இதனை தொடர்ந்து, போப் பிரான்சிஸ், பிஷப் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டுவை பதவியிலிருந்து நீக்கி உள்ளார். அவரது நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, ஆற்றி வந்த பணிகளிலிருந்து முழுவதுமாக ஜோசப் விடுவிக்கப்பட்டுள்ளார் என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ×