என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிவராஜ் சிங் சவுகன்"
- ம.பி.யில் நவம்பர் 17 அன்று 230 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது
- சீனர்கள் ம.பி. எங்குள்ளது என கேட்கும் நாள் வர வேண்டும் என்றார் ராகுல்
இந்தியாவில் அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 2023 இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று, டிசம்பர் 3 அன்று முடிவுகள் வெளியிடப்படும்.
அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக 5 மாநில தேர்தல்களை இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும் கருதுவதால், சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 17 அன்று 230 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகன் முதல்வராக உள்ளார்.
இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
"உங்கள் செல்போனின் பின்புறம் பாருங்கள்; அதில் 'மேட் இன் சீனா' (Made In China) என குறிப்பிடப்பட்டுள்ளது தெரியும். ஆனால், எந்த மொபைல், சட்டை, காலணி, கேமிரா பின்னாலும் 'மேட் இன் மத்திய பிரதேசம்' (Made In Madhya Pradesh) என குறிப்பிடப்பட்டு இருக்காது. அந்த 'மேட் இன் சீனா' எனும் குறிப்பை 'மேட் இன் மத்திய பிரதேசம்' என காங்கிரஸ் மாற்ற விரும்புகிறது."
"இங்குள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி இருக்க கூடாது. அவர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வேண்டும். சீனாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் மொபைல் போன் பின்னால் பார்க்கும் போது, 'மேட் இன் மத்திய பிரதேசம்' என குறிப்பிடப்பட்டிருப்பதை காண வேண்டும். அதனை கண்டு, 'நமது நாட்டின் அனைத்து வேலை வாய்ப்புகளையும் கொண்டு சென்று விட்ட இந்த மத்திய பிரதேசம் எங்கிருக்கிறது' என கேட்க வேண்டும். அப்படி ஒரு நாள் வர வேண்டும். இதைத்தான் காங்கிரஸ் விரும்புகிறது."
"இங்கு எந்த புது தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை என மத்திய பிரதேச மக்கள் அறிவார்கள். ஆனால், பிரதம மந்திரி இங்கு 500 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதாக பொய் சொல்கிறார்."
இவ்வாறு ராகுல் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்