என் மலர்
நீங்கள் தேடியது "சின்னசேலம்"
- அதிகபட்ச மாக உ.கீரனூரில் 35 மி.மீட்டரும்
- குறைந்த பட்சமாக மாடாம் பூண்டியில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு,
கள்ளக்குறிச்சி 14, தியாகதுருகம் 32, கச்சிராயப்பாளையம் 9, கோமுகி அணை 7, மூரார்பாளையம் 9, வடசிறுவலூர் 12, அரியலூர் 12, கடுவனூர் 7, கலையநல்லூர் 25, கீழ்பாடி 12, மூங்கில்துறைப்பட்டு 8, ரிஷிவந்தியம் 18, அரியலூர் 12, மணிமுக்தா அணை 17, வானாபுரம் 13, மாடாம்பூண்டி 5, திருக்கோவிலூர் 29, திருப்பாலபந்தல் 7, வேங்கூர் 18, ஆத்தூர் 18, எறையூர் 10, ஊ.கீரனூர் 35 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்ச மாக உ.கீரனூரில் 35 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக மாடாம் பூண்டியில் 5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மேலும் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 327 மி.மீட்டராக வும், சராசரி 13.62 மி.மீட்டர் அளவாகவும் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.
- சுந்தர் ராஜன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.
- சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் செங்குந்தர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் சுந்தர்ராஜன் (வயது 40). இவருக்கு நித்தியா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுந்தர் ராஜன் கடந்த 7வருடங்களாக சின்னசேலம் வான கொட்டாய் பகுதியில் உள்ள அரசு ஐ.டி.ஐ. நிறுவனத்தில் இளநிலை பயிற்சி அலுவலராக பணியாற்றி வந்தார். சனி, ஞாயிறு விடுமுறையை கழிப்பதற்காக இவரது மனைவியும் குழந்கதைளும் சிதம்பரம் சென்றதாக கூறப்படுகிறது. சுந்தர்ராஜன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே பார்த்தபோது வீட்டின் சந்தில் சுந்தர்ராஜன் கிடந்துள்ளார். அருகே சென்று பார்த்த போது சுந்தர் ராஜன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சுந்தர்ராஜனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பணியின் போது ஏற்பட்ட மோதலால் அலுவலகத்தில் வைத்து பூட்டி சென்றார்.
- தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தில் சங்கீதா என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு இடையே பணியின் போது ஏற்பட்ட மோதலால் நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அப்போது தமிழரசி , உதவியாளர் சங்கீதாவை பார்த்து கதவைத் திறந்து விடு. இல்லையென்றால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை செய்தும் உன்னால் முடிந்ததை பார் என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார் உதவியாளர் சங்கீதா.
இதனைத் தொடர்ந்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து பூட்டி இருந்த கதவை திறந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.