என் மலர்
நீங்கள் தேடியது "பெண்குழந்தை"
- சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.
- குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் முசம்மில் கான். கம்மம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்ற உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் பெண் பிறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண் பெருமை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பெண் குழந்தைகள் பிறந்தால் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து சுவீட் பாக்ஸ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஏற்கனவே கலெக்டர் முசம்மில் கான் பெண்களின் மேம்பாட்டிற்காக மாவட்டத்தில் 19 டீ கடை மற்றும் உணவகங்களை தொடங்கி வைத்து உள்ளார்.
திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.
கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பகல் நேர பராமரிப்பு மையத்தை நடத்தி வருகிறார்.
பராமரிப்பு மையத்தில் குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலம் 74 வாரங்கள் அதிகரிக்கும்.
- பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது.
பெண் குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையேயான பந்தம் உணர்வுப்பூர்வமானது. தந்தை மீது எப்போதுமே பெண் குழந்தைகள் அதிக பாசத்தை காண்பிப்பார்கள். பெண் குழந்தைகள் தந்தையின் ஆயுள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது போலந்தில் உள்ள ஜெகில்லோனியன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தால் தந்தையின் ஆயுட்காலத்தில் சுமார் 74 வாரங்கள் அதிகரிக்கும். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப அந்த வீட்டு தந்தையின் ஆயுளும் அதிகமாகும் என்கிறது, அந்த ஆய்வு.
இதற்கு எதிர்மாறாக தாயின் ஆயுட்காலம் அமைந்திருக்கிறது. ஒரு வீட்டில் மகன் அல்லது மகள், அல்லது இருவரும் இருந்தால் தாயின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறார்கள். அவரது ஆயுளையும் குறைக்கிறார்கள். சராசரியாக தாயின் ஆயுட்காலம் 95 வாரங்கள் குறையும் என்கிறது அந்த ஆய்வு.