என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜாமின் மனு"
- மகாவிஷ்ணு ஜாமீன் கேட்டும் சைதாப்பேட்டை கோர்ட் டில் மனுதாக்கல் செய்தார்.
- மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டை கோர்ட்டில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனு மீதான விசாரணை நேற்று நடைபெறவில்லை.
இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று போலீஸ் காவல் கேட்கும் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதற்காக புழல் சிறையில் இருந்து மகாவிஷ்ணு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் மதியம் 12.15 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து காவலில் எடுக்கும் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில் மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே மகாவிஷ்ணு ஜாமீன் கேட்டும் சைதாப்பேட்டை கோர்ட் டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை மகாவிஷ்ணு திரும்ப பெற்றுள்ளார்.
காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி ஜாமின் மனுவை மகாவிஷ்ணு வாபஸ் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
- ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரியும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது.
இதில், கெஜ்ரிவாலின் மனுக்களுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசரணையின்போது, கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் இல்லை, அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "பஞ்சாப்பில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அவரது உடல் நலம் பரப்புரைக்கு தடையாக இல்லை.
அமலாக்கத்துறை பதில் அளிக்காத வகையில் ஜாமின் கோரி இறுதி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்" என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
- 3 நாட்கள் போலிஸ் காவல் முடிந்து ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
- ரேவண்ணாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்
பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரேவண்ணாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், 3 நாட்கள் போலிஸ் காவல் முடிந்து ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ரேவண்ணாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, ரேவண்ணாவை மே 14 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேவண்ணாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை பெங்களூரு நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்தது.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ரேவண்ணாவை போலீஸ் அழைத்துச் செல்கிறது.
- இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.
- தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு.
பெங்களூரு:
பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரேவண்ணாவை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா சார்பில் அவரது வக்கீல் பவன்சாகர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் விசாரணை நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி விசாரணையை இன்று ஒத்திவைத்தார். எனவே இன்று எச்.டி.ரேவண்ணா ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்கிறது.
பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பான வழக்கை விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் ஆபாசமான வீடியோக்கள், புடைப்படங்களை பகிர்வது மட்டுமல்ல, அவற்றை வைத்திருப்பதும் குற்றம். தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
எனவே ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்தி ருந்தால் கண்டுபிடிப்பது எளிது. எனவே இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புடைப்படங்களை யாராவது வைத்திருந்தால், அவற்றை அழித்து விடுவதன் மூலம் சட்ட நடவடிக்கைகளில் இருந்த தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ஜாமின் மனு மீதான உத்தரவை பிப். 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
- பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மாத சம்பளம் அடிப்படையில் வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.
ஆனால் அந்த பெண்ணுக்கு பேசியபடி சம்பளம் கொடுக்காமல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன், அவரை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீசார் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை ஆந்திராவில் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
மனுதாரர்கள் தரப்பில், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? இந்த விவகாரத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரிய வரும் என்று விவாதிக்கப்பட்டது. போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் மருமகள் ஜாமின் மனு மீதான உத்தரவை பிப். 6-ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
- கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட்.
ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2வது மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விசாரணையின்போது, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே? என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.
- செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை, கண்காணிப்பு தேவைப்படுகிறது.
- வழக்கை அடுத்த வாரம் நவம்பர் 28ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ அறிக்கை எங்கே என நீதிபதி திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளாார்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி," அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை தாக்கல் செய்துள்ளோம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை, கண்காணிப்பு தேவைப்படுகிறது" என்றார்.
மேலும், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் நவம்பர் 28ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்