search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிஎம்ஆர்"

    • அளவுக்கு மீறி அருந்தும்பொழுது கரும்புச்சாற்றில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும்

    இந்தியாவில் நிலவி வரும் அதீத வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தங்களின் உடலை நீரேற்றத்துடன் குளுமையாக வைத்துக்கொள்ள ஜூஸ்களையும் குளிரூட்டயப்பட்ட சாஃப்ட் ட்ரிங்ஸ்களையும் அருந்திவருகின்றனர். அதிலும் முக்கியமாக கரும்பு ஜூஸை அனைவரும் விரும்பி உட்கொள்கின்றனர்.

     

    இதனால் நகரங்கள் மற்றும் டவுன்களில் வீதிக்கு வீதி ஜூஸ் கடைகளும் கரும்புச்சாறு கடைகளும் முளைத்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் மக்களுக்கு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அளவுக்கு மீறி அருந்தும்பொழுது கரும்புச்சாற்றில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

     

     ஆரோக்யமான உணவு முறை குறித்து ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய ஊட்டச்சத்து கழகம் (NIN) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோடைக் காலங்களில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானமாக கரும்புச்சாறு உள்ளது. 100 மில்லி லிட்டர் கரும்புச்சாற்றில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை உள்ளது. இது அதிகப்படியான சர்க்கரை அளவு என்பதால் மக்கள் கரும்புச்சாறு அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடபட்டுள்ளது.

     

    மேலும் அந்த அறிக்கையில், பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும், பழத்தை ஜூஸ் போட்டு அருந்தும்போது பழத்தின் மொத்த சத்தில் 100-150 கிராம் அளவு சத்து மட்டுமே உடலில் சேரும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செயற்கை நிறமிகள் சேர்க்க்கப்பட்ட கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட சாஃப் டிரிங்ஸ்களைத் தவிர்த்து அதற்கு பதிலாக மோர், இளநீர், சர்க்கரை சேர்க்கபடாத பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது. 

     

    • வீட்டில் சமைப்பது என்பது பல நன்மைகளை நிறைந்துள்ளது.
    • பொதுவான சமையல் தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

    உணவில் வீட்டு சமையல் ஆரோக்கியமானதா ? அல்லது வெளி உணவு ஆரோக்கியமானதா ? என்று கேட்டால் வெளி உணவு சாப்பிட்டாலும் அவர்கள் சொல்லக்கூடிய வீட்டு சமையலே சிறந்தது என்று.

    ஆனால், வீட்டு சமையலிலும் நம் செய்யும் முறையில் ஏற்படும் தவறுகளால் வீட்டு உணவும் ஆரோக்கியமற்றதாக மாறிவிடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஐஎம்சிஆர் வீட்டு உணவை மிகவும் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கான வழிகளைப் பட்டியலிட்டுள்ளது. 

    வீட்டில் சமைப்பது பலருக்கு நிம்மதியாக இருக்கும். இது சிலருக்கு அது ஓய்வெடுக்கவும் உதவுகிறது. மற்றவர்களுக்கு சமையல் ஒரு வழக்கமான சாதாரண வேலையாகத் தோன்றும்.

    ஆனால் வீட்டில் சமைப்பது என்பது பல நன்மைகளை நிறைந்துள்ளது. இருப்பினும், அதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய பண்புகளைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது.

    உடல் எடையை குறைக்கும் போது கூட, வீட்டு உணவை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனாலும், உணவை ஆரோக்கியமற்றதாக மாற்றும் சில சமையல் நுட்பங்கள் அதில் உள்ளன.

    இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 17வது அத்தியாய வழிகாட்டியை வெளியிட்டது.

    இது இந்தியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய உணவுப் பழக்கங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை எடுத்துக்காட்டுகிறது.

    முதலில், சில பொதுவான சமையல் தவறுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம். 

    * அதிக வேகவைத்த காய்கறிகள்:

    காய்கறிகளை அதிகமாக சமைப்பது ஊட்டச்சத்துக்களை இழக்க வழிவகுக்கும். ஏனெனில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெப்பத்தை உணர்திறன் கொண்டவை. அவை நீண்ட நேரம் சமைப்பதன் மூலம் அழிக்கப்படலாம்.

    * எண்ணெய் அல்லது வெண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துதல்:

    அதிகப்படியான எண்ணெய் அல்லது வெண்ணெய்யை பயன்படுத்துவது உணவுகளில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளடக்கத்தை கணிசமாக அதிகரிக்கலாம். இது எடை அதிகரிப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

    * உயர் வெப்பநிலை சமையல்:

    அதிக வெப்பநிலையில் சமைப்பது, டீப் ப்ரை போன்றவை புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய அக்ரிலாமைடுகள் மற்றும் ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்க வழிவகுக்கும்.

    * அதிகப்படியான உப்பு பயன்பாடு: சமைக்கும் போது அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு உப்பைச் சேர்ப்பது உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு பங்களிக்கும்.

    உணவுப் பாதுகாப்பைப் புறக்கணித்தல்:

    முறையற்ற உணவைக் கையாளுதல், சேமித்தல் அல்லது சமைத்தல் ஆகியவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படலாம்.

    ஐஎம்சிஆர்-ன் சமீபத்திய உணவு வழிகாட்டுதல்கள் "அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்புடன் தயாரிக்கப்பட்டால் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கூட ஆரோக்கியமற்றதாகிவிடும். 

    அதிக கொழுப்பு அல்லது அதிக சர்க்கரை உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. குடல் நுண்ணுயிரிகளை பாதிக்கின்றன. இது உணவில் விரைவாக மாறுகிறது.

    அதிக உப்பு கொண்ட உணவுகள் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கின்றன. சிறுநீரகங்கள் பாதிப்புக்கு வழி வகுக்கின்றன. எனவே, அதிக உப்பு உட்கொள்வது ஆரோக்கியமற்றது.

    இந்த பொதுவான சமையல் தவறுகளை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், நம் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கும் சுவையான, சத்தான உணவை உருவாக்கலாம்.

    சமையலில் மிதமான மற்றும் சீரான அணுகுமுறை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    • மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை.
    • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்றுக்கு பிறகு இளம் வயதில் மாரடைப்பில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என்று பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

    இதை மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது மறுத்து வந்தாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படவில்லை. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டும் வந்தது.

    இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளால் இளைஞர்களிடையே திடீர் மரணம் ஏற்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

    மேலும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில், மரபு தொடர்பான நோய்கள், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால்தான் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

    ×