என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுநல வழக்கு"

    • ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
    • அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்.

    சென்னை:

    போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பின்பு டிசம்பர் 6-ந்தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

    • மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும்
    • ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன்

    சிறுமிகளுடன் டேட்டிங் செய்வதாக மைனர் சிறுவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியள்ளது. ஆனால் மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பந்தாரி என்ற சமூக ஆர்வலரால் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்ட்டது.

     

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வெறுமனே சிறுவர்களை கைது செய்வதற்கு பதிலாக நடைமுறை தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும். பெற்றோரின் புகார் மட்டுமே சிறுவர்களை கைது செய்வதற்கு போதுமானது அல்ல. கைது செய்வதற்கு பதிலாக சிறுவர்களுக்கு அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறை வழங்கலாம். மாநில அரசு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து காவல்துறையினருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

     

    பொதுநல வழக்கு தாக்கல் செய்த பந்தாரி, ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி என்று கோபமாக பேசியுள்ளார்
    • பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது

    உச்சநீதிமன்றம் ஒன்றும் காபி ஷாப் இல்லை என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வக்கீலுக்கு பாடம் எடுத்த சம்பவம் நிகழ்ச்த்துள்ளது. இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் வக்கீல் ஒருவருடன் சட்டப்பிரிவு 32 இந்த கீழ் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீது சந்திரசூட் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    2018 தேதியுடைய அந்த மனுவில் அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை அந்த வக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 2018 இல் இந்த வக்கீல் வாதாடிய அந்த பொதுநல வழக்கை அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் அந்த மனுவில் எந்த தவறும் இல்லை என்பதால் அதை தள்ளுபடி செய்திருக்கக்கூடாது என்று தற்போது மீண்டும் அந்த வக்கீல் உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுவை சமர்ப்பித்துள்ளார். எனவே அதில் ரஞ்சன் கோகாய் பெயரை வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால் பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது என்று சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துப் பேசிய வக்கீல், சாதாரணமாகப் பேசுவதுபோல், 'யா [Yeah] யா [Yeah], அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய்... மறுபரிசீலனை மனு..' என்று இழுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சந்திரசூட், உடனே அந்த வக்கீலை இடைமறித்து, 'இது ஒன்றும் காபி ஷாப் கிடையாது, என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி, இதற்கு இங்கு அனுமதி கிடையாது' என்று கோபமாகக் கடிந்துகொண்டார். இதனால் நீதிமன்ற அவையே சற்று நேரம் சற்று நேரம் அமைதியில் மூழ்கியது.

    • சீக்கியர்களை குறைந்த அறிவுத்திறன் கொண்டவர்கள், முட்டாள்கள் என்று சித்தரிக்கின்றன
    • பள்ளியில் சீக்கிய அடையாளத்துக்காகக் கேலி செய்யப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை குறிப்பிட்டார்

    சர்தார்ஜி ஜோக்குகள் என்பது இந்தியா முழுவதிலும் பிரபலமான ஒன்றாக உள்ளது. சீக்கிய மதத்தை பின்பற்றும் குறிப்பாக பஞ்சாபி மற்றும் அரியானா ஆண்கள் சர்தார்ஜி என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை முன்னிறுத்தி கூறப்படும் ஜோக்குகள் சர்தார்ஜி ஜோக்குகள் எனப்படும்.

    வெகு காலமாவே மக்கள் மத்தியில் புழங்கி வரும் இந்த ஜோக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக சில சர்தார்ஜி ஜோக்குகள் மனதை புண்படுத்தும் வகையாக அமைந்துவிடுகிறது. எனவே இந்த முறையற்ற சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி சீக்கிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சௌத்ரி கடந்த 2015 தாக்கல் பொது நல வழக்கு (பிஐஎல்) தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பூஷன் ஆர் கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது.

     

    அப்போது பேசிய வழக்கறிஞர் ஹர்விந்தர் சௌத்ரி, இத்தகைய நகைச்சுவைகள் சீக்கியர்களை குறைந்த அறிவுத்திறன் கொண்டவர்கள்,   முட்டாள்கள் என்று சித்தரிக்கின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களின் உடைக்காக கேலி செய்யப்படுகின்றனர், சீக்கிய குழந்தைகள் பள்ளி தோழர்களால் கேலி செய்யப்படுகின்றனர். நகைச்சுவைகள் அடிப்படை சிந்தனையையே மாற்றியமைக்கிறது. இந்த நகைச்சுவைகள் மனித மனதை பாதிக்கின்றன என்று அவர் கூறினார்.

    மேலும் பள்ளியில் சீக்கிய அடையாளத்துக்காகக் கேலி செய்யப்பட்ட சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் சவுத்ரி எடுத்துக்காட்டினார். சமூகத்திற்கு இந்த ஸ்டீரியோடைப்கள் ஏற்படுத்தும் தீங்குகளை மேற்கோள் காட்டி, டிஜிட்டல் தளங்களில் புண்படுத்தும் உள்ளடக்கத்தை கொண்ட இந்த ஜோக்குகள் கையாளப்படுவதைத் தடுக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சௌத்ரி தெரிவித்தார்.

    இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், இது ஒரு முக்கியமான பிரச்சினை, சீக்கிய சமூகத்தை குறிவைத்து பரவி வரும் புண்படுத்தும் நகைச்சுவைகளைப் பற்றியும், இதை கட்டுப்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைக் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பாக பள்ளிகளில் இதுகுறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு குறித்த மேலதிக விசாரணையை 8 வாரங்களுக்குப் பிறகு ஒத்தி வைத்தனர்.   

    ×