என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதை கடித்து"

    • எந்த காரணமும் இல்லாமல் எனது மனைவி என்னுடன் சண்டை போட்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த 45 வயதான வாலிபர் ஒருவர், மனைவி தனது காதை கடித்து துண்டித்து துப்பியதாக டெல்லி போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் டெல்லியின் புறநகர் பகுதியான சுல்தான்புரியில் வசித்து வருகிறேன். கடந்த 20-ந் தேதி காலையில் நான் வீட்டில் இருந்தேன். அப்போது எந்த காரணமும் இல்லாமல் எனது மனைவி என்னுடன் சண்டை போட்டார்.

    அப்போது அவர் என்னிடம், 'நான் குழந்தையுடன் தனியாக வசிக்க விரும்புகிறேன். எனவே வீட்டை விற்று அதில் ஒரு பங்கு பணத்தை தாருங்கள்' என்று கேட்டார். அதற்கு நான் மறுத்து விட்டேன். மேலும் அவரை நான் சமாதானப்படுத்த முயற்சித்தேன். அப்போது எங்களுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர் என்னை அடிக்க முயன்றார். இதனால் நான் அவரை பிடித்து தள்ளி விட்டேன்.

    பின்னர் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றேன். அப்போது அவர் பின்னால் இருந்து என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டார். பின்னர் எனது வலது காதை வேகமாக கடித்தார். நான் வலியால் அலறி துடித்தேன். அப்போதும் அவர் என்னை விடவில்லை. காதை கடித்து தனியாக துண்டித்து துப்பினார். இதனால் எனது வலது காதின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து எனது மகன் என்னை மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றான்.

    இவ்வாறு அவர் தனது புகாரில் கூறி இருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் அந்த பெண்ணின் மீது 324 (அபாயகரமான ஆயுதங்கள் அல்லது வேறு வழிகளில் காயப்படுத்துதல்) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், 'கடந்த 20-ந்தேதி கணவரின் காதை மனைவி கடித்து துப்பியதாக மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாங்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினோம். அப்போது அவர் வாக்குமூலம் அளிக்க முடியாத நிலையில் காணப்பட்டார். பின்னர் அவர் கடந்த 22-ந்தேதி எங்களை அணுகி

    எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இதையடுத்து அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

    இந்த நிலையில் அவருக்கு காதை மீண்டும் ஒட்டவைப்பதற்காக வேறொரு ஆஸ்பத்திரியில் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

    ×