search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தற்போதும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

    இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக் கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழகத்தின் ஊடாகச் செல்வதால் வட தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துக் கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம் நாளை (புதன் கிழமை) மேலும் வலுவடையும்.

    அதன் பிறகு அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு மியான்மா் நாடு பரிந்துரை செய்த 'மிச்சாங்' என்ற பெயா் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு வருமா? அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் துல்லியமாகத் தெரியவரும்.

    இன்று (செவ்வாய்க் கிழமை) தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

    நாளை (புதன்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் இன்றுக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புயல் சின்னம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் இன்று கேட்டபோது, அவர் கூறிய தாவது:-

    திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரையில் அது வருகிற 2-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வலுப்பெற்ற பின்னர் அது புயலாக மாறுவது எப்போது? என்பதில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் தற்போதைய சூழலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
    • விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் இரண்டாம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.

    தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை சென்னையில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 2-ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    • புயல் கரையை கடக்கும் போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும். வரும் 4-ந்தேதி இந்த புயலானது சென்னை-மசூலிப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டது.

    இந்நிலையில் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    அதாவது, 4-ந்தேதி புயல் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5-ந்தேதி முற்பகலில் ஆந்திராவின் நெல்லூர் - மசூலிபட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளதை குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
    • 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதுதொடர்பாக மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக

    சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 7 துறைமுகங்களில் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளதை குறிக்கும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    புயலின் அடுத்தகட்ட நகர்வை பொறுத்து, ஒவ்வொரு துறைமுகங்களில் மேலும் எச்சரிக்கை கூண்டுகள் அதிகரிக்கப்படும். புயலின் தன்மையை பொறுத்து மொத்தம் 11 கூண்டுகள் வரை ஏற்றுவார்கள். இதில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டுள்ளதையும், துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களுக்கு ஆபத்து என்பதையும் உணர்த்தும். அதுவே 11-ம் எண் கூண்டு வானிலை எச்சரிக்கை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது. மோசமான நிலை என்பதை தெரிவிக்கும்.

    பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி என ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வரும் 4-ந்தேதி பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் வரும் 4-ந்தேதி பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    • செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி இந்த 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு 044-27427412, 27427414 எண்ணும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணிற்கும் 9444272345 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    திருவள்ளூர் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 044-27664177, 27666746, 9444317862 எண்ணும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 என்ற எண்ணிற்கும் 9444317862 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    • 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், 'மிச்சாங்' புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 25 பேர் கொண்ட குழு மாங்காடு பகுதிகளுக்கும், மீதமுள்ள 25 பேர் கொண்ட குழு காஞ்சிபுரம் பகுதியிலும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

    • சமூக வளைதளங்களில் புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம்.
    • மின்னலின்போது எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டாம்.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிக்ஜாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், புயல் எதிரொலியால் பொது மக்களுக்கு சென்னை காவல்றை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன்படி, புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மேலும், சமூக வளைதளங்களில் புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    கடல் அலைகள் அதிகப்படியால் இருப்பதால் பொது மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இடி, மின்னலின்போது எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    • புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி 4 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    • புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை :

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி இந்த 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையிலும் தரைக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும் கட்டுமான பணிகளை நிறுத்துவதுடன் அதற்கான பொருட்களை தரை தளத்தில் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
    • நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள 'மிச்சாங்' புயல் வரும் 5-ந்தேதி கரையை கடக்க உள்ள நிலையில் பொது சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

    * தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

    * அவரச கால மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    * நிவாரண மையங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    * தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    * நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    * ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

    * சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.
    • நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவரைவு ரெயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு.
    • தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாளை மற்றும் திங்கட்கிழமை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இதேபோல், தொலைதூரக் கல்வித் திட்டத்தில் நடைபெற இருந்த தேர்வும் ஒத்திவைக்கப்படுகிறது.

    மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்திலும் வரும் 4ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    ×