என் மலர்
புதுச்சேரி

X
மிச்சாங் புயல்... பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் 4-ந்தேதி விடுமுறை
By
மாலை மலர்2 Dec 2023 12:29 PM IST

- தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் 4-ந்தேதி பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் வரும் 4-ந்தேதி பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X