search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்கட்சி"

    • அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த வாக்கெடுப்பின்போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பு சண்டையாக மாறி தைவான் பாராளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்தது. அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர். தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    இன்னும் சில நாட்களில் ஜனாதிபதியாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே அரசை பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல், அரசின் முக்கிய பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற பெரும்பாண்மை வாக்குகள் கொண்ட KMT கட்சி முயன்றதே இந்த கைகலப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

     

    தைவான் நானடாளுமன்றத்தில் கைகலப்பு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு KMT கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

     

    • கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது
    • 2 நிதி மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜோஷி தெரிவித்தார்

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 22 அன்று நிறைவடைய உள்ளது. இக்கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் இடம்பெறும்.

    முன்னதாக பாராளுமன்ற நடவடிக்கைகள் கூச்சல், குழப்பங்கள், தடைகள் ஏதுமின்றி நடைபெற அனைத்து கட்சியினரின் ஒத்துழைப்பை கோரும் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல எதிர்கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அதில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ள பிரச்சனைகள், கோரிக்கைகள், கண்டனங்கள் உள்ளிட்ட விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

    எதிர்கட்சிகள் தரப்பில், உயர்ந்து வரும் விலைவாசி, புலனாய்வு அமைப்புகளின் துஷ்பிரயோகம் ஆகியவை விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஆளும் பா.ஜ.க. கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய கிரிமினல் சட்டங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவமும், சொல்லகராதியையும் எதிர்கட்சிகள் கோரின.

    இக்கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசும் போது, "19 மசோதாக்களையும், 2 நிதி மசோதாக்களையும் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம். அனைத்து விஷயங்களையும் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்கட்சிகள் விவாதங்களுக்கான சூழலை அமைக்க ஒத்துழைப்பு தர வேண்டும். பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ளோம்" என தெரிவித்தார்.

    ஆளும் கட்சி திட்டமிட்டபடி என்னென்ன மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேறப்படும் என்பது வரப்போகும் நாட்களில் தெரிய வரும்.

    ×