என் மலர்
நீங்கள் தேடியது "சுரங்கப்பாதைகள்"
- கனமழை காரணமாக சாலைகளில் குளம்போல் மழை வெள்ளம் தேக்கம்.
- சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சாலையின் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழைநீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட மாநராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கணேசபுரம், கொங்கு ரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்க், ரங்கராஜபுரம், அரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதில் 2 இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. திருமங்கலம் எஸ்டேட் சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
- புழல் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை.
- ஆவடியில் அதிகபட்சமாக 28 செ.மீ. கொட்டித்தீர்த்துள்ளது.
மிச்சாங் புயல் காரணமாக சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
புழல் ஏரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மஞ்சம்பாக்கம், வடப்பெரும்பாக்கம் சாலையில் போக்குவரத்து அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு 5,777 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரிநீர் திறப்பு 2,000 கனஅடியில் இருந்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:
ஆவடி - 28 செ.மீ.
சோழவரம் - 20 செ.மீ
பொன்னேரி -19 செ.மீ
செங்குன்றம் - 17 செ.மீ
தாமரைப்பக்கம் - 17 செ.மீ
கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ
ஊத்துக்கோட்டை - 15 செ.மீ
திருவள்ளூர் - 15 செ.மீ
பூந்தமல்லி - 14 செ.மீ
ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ
திருத்தணி - 12 செ.மீ
பூண்டி - 12 செ.மீ
திருவாலங்காடு - 10 செ.மீ
பள்ளிப்பட்டு - 6 செ.மீ
ஆர்கே பேட்டை - 4 செ.மீ
- சென்னையில் கடந்த 5 மணி நேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகி உள்ளது.
- அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியி 12 செ.மீ. மழை பெய்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது.
சென்னையில் கடந்த 5 மணி நேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 10 செ.மீ. மற்றும் தண்டையார்பேட்டையில் 11 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. எழும்பூர், ஆர்பிஐ, பெரம்பூர், பழவந்தாங்கல், ரங்கராஜபுரம், திருவொற்றியூர், ராஜா முத்தையா சாலை, மில்லர்ஸ் ரோடு, அண்ணா பிளைவ் ஓவர் சர்வீஸ் ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.