என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரிசை"

    • புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.
    • ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.83 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டாலரை (ரூ.5.83 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

    சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைபிடித்துள்ளார். புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.

    இவருக்கு அடுத்தபடியாக டாப் 20 பட்டியலில் இரண்டாவது இந்தியராக கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார்.

    அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. இதையடுத்து அவற்றின் ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி 20 சதவீதம் அதிகரித்து ரூ.1.348-க்கும், அதானி எனர்ஜி 16.38 சதவீதம் உயர்ந்து ரூ.1,050-க்கும், அதானி டோட்டல் கேஸ் 15.81 சதவீதம் அதிகரித்து ரூ.847.90-க்கும், அதானி என்டர்பிரைசஸ் 10.90 சதவீதம் உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 805-க்கும் வர்த்தகமாகின.

    இவ்வாறு புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ×