என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தைகளுக்கான பராமரிப்பு"
- சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும்.
- கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும்.
பெண்களின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் கொண்டதாகும். இந்த காலம் முழுவதுமாக பூர்த்தியடைந்து பிரசவிக்கப்படும் குழந்தைகள், சீரான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தோடு பிறக்கிறார்கள். ஆனால் பிரசவ தேதிக்கு சில மாதங்கள் முன்பாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை தடுக்க அந்த குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு வழங்குவது முக்கியமானதாகும்.
குறைமாதத்தில் பிறந்த குழந்தையை மட்டுமில்லாமல், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்திலும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தகுந்த பாதுகாப்பும். உரிய சிகிச்சையும் வழங்கப்படும். வீட்டிற்கு வந்த பின்பு அந்த குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்வதற்கான சில வழிகள்.
சீரான வெப்பநிலை:
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் இருக்கும் அறையில், சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே மருத்துவமனைகளில் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். எனவே வீட்டிற்கு வந்த பின்னும், குழந்தைக்கு சீரான வெப்பநிலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் சீராக இருக்கும்.
வீட்டில். துணிகளை அடுக்கடுக்காக விரித்து அதன்மேல் கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும். முடிந்தவரை, கனமான போர்வைகளை தவிர்த்து காட்டன் புடவைகளை தேர்வு செய்யுங்கள். தெர்மாமீட்டர் கொண்டு, குழந்தையின் உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை 36.5 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரையும், அறையின் வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்க வேண்டும்.
சீரான தூக்கம்:
பிறந்த குழந்தைகளுக்கு சீரான தூக்கம் அவசியமானது. அதிலும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி சீராக உறங்க தேவையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களை படுக்க வைக்கும் அறையில், சீரான வெப்பநிலையும், மங்கலான வெளிச்சமும் இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளை விட இவர்களுக்கு இரவு நேரத்தில் பசி அதிகமாக இருக்கும். எனவே, அடிக்கடி பாலூட்ட வேண்டும்.
குளியல்:
குறைமாத குழந்தைகளை குளிக்க வைக்கும்போது உபயோகிக்கும் தண்ணீர், சோப்பு, லோஷன் ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணிரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 100 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்க வேண்டும். குழந்தையின் தலையை சுத்தம் செய்ய, தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ரசாயனம் நிறைந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது.
குழந்தையின் எடை 2.5 கிலோ அளவுக்கு வரும் வரை கடற்பாசி கொண்டு குளிக்க வைக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை கடைகளில் கிடைக்கும் லோஷன் பவுடர், எண்ணெய் உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.
பயணத்தை தவிர்க்கவும்:
குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுற்றுச் சூழல் காரணமாக எளிதில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால், காற்று மாசு காரணமாக எளிதில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் ஓராண்டு வரை பயணங்களை தவிர்ப்பது சிறந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்