என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரவுநேர வேலை"
- உறக்கத்தை பறிகொடுத்துவிட்டு, ஓய்வின்றி அலைந்து கொண்டிருக்கின்றனர்.
- உடலை பராமரிக்க, சரியான ஓய்வு அவசியம்.
ஐ.டி.நிறுவனங்கள், இரவு நேர ஊழியர்களை இப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்துகிறது. வீட்டில் இருந்தே பணியாற்றும் வசதி, மனதிற்கு இதமாக இருந்தாலும், உடலுக்கு பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்திருக்கிறது. வேலை பளு அதிகரிப்பு, பகலில் குடும்ப வேலை, இரவில் அலுவலக வேலை என 24 மணிநேரத்தில் 18 மணிநேரம் வேலையிலேயே கழிந்துவிடுகிறது. இதனால் பெரும்பாலானோர் உறக்கத்தை பறிகொடுத்துவிட்டு, ஓய்வின்றி அலைந்து கொண்டிருக்கின்றனர். இது தொடர்கதையானால், ஒருநாள் உறக்கம் என்பதே கனவாகிப் போகும். இதை இளம்தலைமுறையினர் உணரவேண்டியது அவசியம்.
தூக்கமின்மை சிக்கல்
சரியாக தூங்கவில்லை யென்றால், இதயநோய், மன அழுத்தம், சோர்வு ஆகிய பாதிப்புகளுடன் சராசரி உடல் இயக்கமும் தடைப்பட வாய்ப்புள்ளது. என்னதான் கடுமையாக உழைத்து, செல்வத்தை சேர்த்து வைத்தாலும், அதை அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும். உடலை சரியாகப் பராமரிக்க, சரியான அளவுக்கு ஓய்வு அவசியம்.
வீட்டிற்குள்ளேயே தினமும் கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்யலாம். உடல் இயக்கம் சீராகி, தூக்கத்தை வரவழைக்கும். உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், நடைப்பயிற்சி, தியானம் செய்வது நல்லது. செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே, கண்கள் ரிலாக்ஸாகி தூக்கம் வரும். இரவில், எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. மிகக்குறைவாகவோ, மிக அதிகமாகவோ சாப்பிடுவதை இரவில் தவிர்க்க வேண்டும்.
- பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்.
- தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது.
விலைவாசி உயர்வு, குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலத்தை குறித்த பயம் போன்ற பல காரணங்கள் மக்களை நேரம் காலம் பார்க்காமலும், இரவு பகல் என்று நினைக்காமலும் வேலை செய்ய வைக்கிறது. ஆனால், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலக்கோளாறுகள் மற்றும் மன ரீதியான கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.
பகல் நேரத்தில் வேலைசெய்யும் பெண்களை விட இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. அதனால் இரவுநேர வேலையை குறைத்துக்கொள்வது நல்லது. எப்படி குறைக்கலாம் என்று தானே கேட்கிறீர்கள். மாதம் முழுவதும் இரவுநேர வேலை பார்ப்பதைவிட மாதம் ஒருமுறை மட்டும் இரவுநேர வேலை பார்க்கலாம்.
2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இரவுநேர வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இரவுநேரத்தில் வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படுகிறது. அதனால் உடலும், மனதும் சோர்வடையும்.
இரவுநேரத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக வேலைபார்த்தாலும் சில தடுமாற்றம் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உடல் ஓய்வெடுக்கச் சொல்லும். அந்த நேரத்தில் உங்கள் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரவுநேரத்தில் வேலை செய்து பகலில் தூங்குவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினை ஏற்படும். வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் குடல் பிரச்சினை, இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்தும்.
நீங்கள் இரவில் வேலை செய்துவிட்டு பகலில் நேரத்தில் தூங்கினாலும் உங்களால் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியாது. இதனால் நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.
இரவுநேரத்தில் வேலை செய்பவர்கள் காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
இரவுநேரத்தில் வேலைபார்ப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்