search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஎஸ்பி"

    • பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
    • ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கல்.

    தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைவரின் வாழ்க்கை மிகக் கொடூரமாக துண்டிக்கப்பட்டுவிட்டது.

    ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும். 24 மணி நேரமும் அற்ப அரசியலில் ஈடுபடுவதை விடுத்து திமுக- காங்கிரஸ் கொஞ்சம் கருணை காட்டுவது நல்லது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை.
    • பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.

    ஆம்ஸ்டராங்கை வெட்டிக் கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்படுகிறது. மேலும், கட்சி அலுவலத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அனுமதி கோரி மாநகராட்சியிடம் அளித்த கோரிக்கை மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், ஆம்ஸ்ட்ராங் உடல் கல்டி அலுவலகத்தில் அடக்க செய்ய அனுமதி வழங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    • திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை கும்பல் வைத்துள்ளது.
    • 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயேவிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தியை ஆற்காடு சுரேஷின் உருவப்படத்தில் கொலை கும்பல் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்ததும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை கும்பல் வைத்துள்ளது.

    நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டு கத்தியை வைத்ததகாக தகவல் வெளியாகியுள்ளது .

    கத்தியை வைத்தபின் திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.

    கொலை செய்த பிறகு பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயேவிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.

    • டேனிஷ் அலியை பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக கழுத்தில் பதாகை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. தற்காலிகமாக நீக்கி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    கடந்த செப்டம்பர் மாதத்தில், டேனிஷ் அலியை பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நியாயம் கேட்டு டேனிஷ் அலி புகாரளித்தார். ரமேஷ் பிதுரியும் டேனிஷ் அலிக்கு எதிராக புகார் அளித்தார். தனக்கு நியாயம் கேட்டும் பாராளுன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதைதொடர்ந்து, நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தன்னைப் போலவே அவரும் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி மொய்த்ராவுக்கு ஆதரவாக கழுத்தில் பதாகை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், டேனிஷ் அலியை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரான அறிக்கைகள் அல்லது செயல்களுக்கு எதிராக நீங்கள் பலமுறை எச்சரிக்கப்பட்டீர்கள். ஆனால், அதையும் மீறி நீங்கள் தொடர்ந்து கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தது.

    இருப்பினும், தனது கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள டேனிஷ் அலி, "எந்தவிதமான கட்சி விரோதப் பணிகளையும் செய்யவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியை வலுப்படுத்த நான் விடாமுயற்சியுடன் முயற்சித்தேன். கட்சிக்கு எதிரான எந்த வேலையும் செய்யவில்லை. இதற்கு எனது அம்ரோஹா பகுதி மக்களே சாட்சி.

    பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை நான் கண்டிப்பாக எதிர்த்துள்ளேன், அதைத் தொடருவேன். இதைச் செய்வது ஒரு குற்றம் என்றால், அதற்காக எந்த தண்டனையையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

    தனக்கு எதிரான கட்சியின் முடிவு "துரதிர்ஷ்டவசமானது". அதே நேரத்தில், தனக்கு மக்களவைச் சீட்டு வழங்கியதற்காக மாயாவதிக்கு நன்றி" என்று கூறினார்.

    ×