என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாஷ் ஆனந்த்"

    • தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை.
    • அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார்.

    மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். அதோடு ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஆகாஷ் ஆனந்திற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, மருமகனின் கட்சி விரோத நடவடிக்கைகளால் குறிப்பாக அவரது மாமனாருடன் சேர்ந்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்ததால் இரண்டாவது முறையாக ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மாயாவதி கடந்த மாதம் அதிரடியாக நீக்கினார்.

    தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை. கட்சி விவகாரத்தை தானே பார்த்துக் கொள்கிறேன் என மாயாவதி அப்போது தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்த் தனது செயலுக்கு நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'கட்சியில் இருந்து எனது நீக்கத்துக்கு காரணமான பதிவை எக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன்பு போட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    எனது உறவினர்கள் அல்லது வெளிநபர்கள் அறிவுரைப்படி எந்த அரசியல் முடிவும் எடுக்கமாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என தெரிவித்தார்.

    ஆகாஷின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார்.

    இதுகுறித்து மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில், தனது தவறை உணர்ந்து பொதுவெளியில் மன்னிப்பு கேட்டதால் ஆகாஷுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குவதாகவும் அதேநேரம் தான் ஆரோக்கியமாக இருக்கும் வரை, கட்சிக்கு எந்த வாரிசையும் நியமிக்கப்போவது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

    • பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது.
    • இதில் மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசை அறிவித்தார்.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான உதய்வீர் சிங் கூறுகையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை அவர் அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.

    • மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு அறிவித்தார்.
    • கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார்.

    லக்னோ:

    மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். அதோடு ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஆகாஷ் ஆனந்திற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இரண்டாவது முறையாக ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மாயாவதி அதிரடியாக நீக்கி உள்ளார்.

    அவருக்கு பதில் அவரது தந்தை ஆனந்த் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜி கவுதம் ஆகியோரை அந்தப் பொறுப்பில் நியமித்துள்ளார்.

    தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை. கட்சி விவகாரத்தை தானே பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×