என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாக்ஸ் ஆபீஸ் வசூல்"
- கடந்த 5 ஆம் தேதி தி கோட் படம் வெளியாகியிருந்தது
- ரூ.1000 கோடி வரை வசூலிக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்திருந்தது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்படம் வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கோட் படம் வெளியாகி 13 நாட்களில் 413 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஈட்டியுள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் ரூ.1000 கோடி வரை வசூலிக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்திருந்தது.
#TheGreatestOfAllTime ??smashing the Box Office with 413 Crores in just 13 Days??#ThalapathyTakeover #MegaBlockbusterGOAT ?@actorvijay SirA @vp_offl HeroA @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh… pic.twitter.com/hlvhQNXwdv
— AGS Entertainment (@Ags_production) September 18, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தி ரசிகர்கள் தென்னிந்திய படங்களையும் விரும்ப தொடங்கி உள்ளனர்
- நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்க இயக்குனர்கள் முயல்கின்றனர்
தென்னிந்திய மாநிலங்களில் இருந்து நாடு முழுவதும் வெளியிடப்படும் திரைப்படங்கள் பெரும் வசூலை அள்ளி குவிக்கின்றன. புஷ்பா, கேஜிஎஃப்-2, காந்தாரா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணங்கள்.
தற்போதைய இயக்குனர்களும், முன்னணி தென்னிந்திய கதாநாயகர்களும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தங்கள் படங்கள் உருவாக வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி நடிகரை தங்கள் திரைப்படங்களில் ஒரு வேடத்தில் இடம்பெற செய்து நாடு முழுவதும் உள்ள பல மாநில ரசிகர்களையும் ஈர்க்க தொடங்கி உள்ளனர்.
இவ்வருடம் வெளியாகப் போகும் 7 தென்னிந்திய திரைப்படங்கள், பாலிவுட்டில் பெரும் வசூலை குவிக்கப் போவதாக திரைப்பட வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.
அந்த திரைப்படங்கள் பின்வருமாறு:
1. கல்கி 2898 ஏ.டி. - பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம். பிரபாஸ் மற்றும் தீபிகா ஆகியோருடன் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
2. புஷ்பா 2, தி ரூல் - அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், முதல் பாகத்தை விட சிறப்பாக உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3. காந்தாரா, சேப்டர் 1 - காந்தாரா முதல் பாகத்தை விட பெரும் வெற்றி பெறும் முனைப்பில், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக உழைத்து வருகிறார்.
4. தேவரா பாகம் 1 - ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ஜுனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு தரும் இவ்வருட பரிசு. இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார்.
5. கேம் சேஞ்சர் - முன்னணி தெலுங்கு ஹீரோவான ராம்சரணும், தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் ஷங்கரும் இணைந்துள்ள படம். அரசியல் நெடி அதிகம் உள்ள இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
6. இந்தியன் 2 - 1996ல் நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். சேனாபதியாக மீண்டும் மிரட்ட வருகிறார் கமல்.
7. கங்குவா - நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் ஹீரோ சூர்யா நாயகனாக நடிக்கும் படம். இதுவரை இல்லாத சாதனையாக 38 மொழிகளில் உருவாகிறது.
இப்படங்கள் ரசிகர்களிடம் எவ்வளவு தூரம் வரவேற்பை பெறும் என்பது வரும் மாதங்களில் தெரிந்து விடும்.
- மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் "திரிஷ்யம்" பெரும் வெற்றி பெற்றது
- விஜயமோகன் எனும் வக்கீல் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார்
கடந்த டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.
2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்ட "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரிஷ்யம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் பெரும் வெற்றி பெற்றதும், 2021ல் இதே கூட்டணியில் "திரிஷ்யம் 2" வெளியாகி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 2 வருடங்கள் கடந்து ஜீத்து ஜோசப்-மோகன்லால் இணைந்துள்ளதால், நெரு திரைப்படத்திற்கு மோகன்லால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கும் ஆவலில் உலகெங்கும் திரைப்பட ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை போல் நெரு திரைப்படமும் நேர்மறை விமர்சனங்களுடன் வசூலை குவித்து வருகிறது.
இதுவரை உலகெங்கும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கதை சுருக்கம்:
சாரா (அனஸ்வரா ராஜன்) எனும் இளம் பெண், பார்வை குறைபாடு உள்ள மாற்று திறனாளி. அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறார். சிற்பக்கலை நிபுணரான சாரா, குற்றவாளியின் வடிவத்தை களி மண்ணில் செய்து தர, அதை வைத்து காவல்துறை, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. ஆனால், குற்றவாளி ஜாமீனில் வெளி வந்து விடுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக விஜயமோகன் (மோகன்லால்) எனும் வக்கீல் ஆஜராகி வழக்கை சிறப்பாக வாதாடி நீதியை நிலைநாட்டுகிறார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- முதல் நாளில் இருந்தே வசூலில் அனிமல் சாதனை புரிந்து வருகிறது
- அனிமல் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என எம்.பி. விமர்சித்தார்
கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உலகளவில் இத்திரைப்படம் வசூலில் ரூ.600 கோடி இதுவரை வசூலித்துள்ளது.
மிகவும் அதிகமாக வன்முறை காட்சிகள் இடம்பெறுவதாக விமர்சிக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு தொடர்கிறது.
"நாம் அனைவரும் திரைப்படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தோம். சமூகத்தின் கண்ணாடியாக விளங்குவது சினிமா. அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு நோய் போன்றவை. எனது மகளும் மேலும் சில குழந்தைகளும் இப்படத்தை காண சென்று பாதியிலேயே திரும்பி விட்டனர். இத்திரைப்படம் ஆணாதிக்கத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கிறது. இதற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு கிடைத்தது?" என பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில எம்.பி.யான ரஞ்சீத் ரஞ்சன் மாநிலங்களவையில் "அனிமல்" திரைப்படம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்