என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை ஆட்சியர்"

    • அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக ஆட்சியர் குறுக்கீடு செய்தார்.
    • மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.

    மதுரை ஆட்சியர் சங்கீதாவை மாற்றக்கோரி விசிகவினர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆட்சியரை மாற்றக்கோரி சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், இன்று மதுரை ஆட்சியர் சங்கீதாவை மாற்றக்கோரி பெரியார் பேருந்து நிலையம் முன்பாக விசிகவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

    அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக ஆட்சியர் சங்கீதா குறுக்கீடு செய்தார். மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.

    • சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு விசிகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
    • மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம் பட்டியில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் அரசமுத்துப்பாண்டியன், மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திடீரென சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். வாகனங்கள் செல்ல முடியாதவாறு டோல்கேட் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர்.

    மதுரை மாவட்ட கலெக்டர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறார். கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுக்கிறார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

    தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்றுகை போராட்டத்தால் சிட்டம்பட்டி டோல்கேட் இருபுறமும் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அணிவகுத்து நின்றது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    • 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்களுக்கான அதிகளவு போதை மாத்திரை மற்றும் போதை டானிக் பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×