என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி சட்டமன்றம்"
- பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு மசோதா கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
- மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு, தொகுதி வரையறை செய்யப்பட்டடு அமல்படுத்தப்படும்.
மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேறியது.
என்றாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்பட்ட பிறகே இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் 2029-க்கும் முன்னதாக இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை.
இந்த நிலையில் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு மாநில சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இரண்டு மசோதாக்களை பாராளுமன்றத்தில் இன்று மத்திய அரசு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி 30 தொகுதிளை கொண்ட சட்டமன்றமாகும். ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் மொத்தம் 114 தொகுதிகளை கொண்டதாகும். இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் 24 தொகுதிகளும் அடங்கும். ஜம்மு-காஷ்மீரில் தொகுதி வரையறை முடிந்த பின்னர் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.