search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாலிவுட் திரைப்படங்கள்"

    • நான் வெளிப்படையாக கூறினாலும் நம்ப மறுக்கின்றனர் என்றார் ஷாருக்
    • எனக்கு மேற்கத்திய திரைத்துறையில் நண்பர்கள் உள்ளனர் என்றார் ஷாருக்

    1992ல் "தீவானா" எனும் தனது முதல் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதித்தவர் ஷாருக் கான் (58).

    30 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களை வழங்கி, சக முன்னணி கதாநாயகர்களான சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோரில், "கிங் கான்" (King Khan) என அழைக்கப்படும் ஷாருக், சில தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த 2023ல், ஜவான், பதான், மற்றும் டன்கி என 3 தொடர் வெற்றிப்படங்களை அளித்தார்.

    இந்நிலையில், பிப்ரவரி 14 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாய் நகரில், உலக அரசுகளின் உச்சி மாநாடு (World Governments Summit 2024) நடந்தது.

    இதில் கலந்து கொண்டு உரையாடிய ஷாருக் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது அவரிடம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என கேட்கப்பட்டது. 


    அதற்கு ஷாருக் பதிலளித்ததாவது:

    நான் வெளிப்படையாக பலமுறை இதற்கு பதிலளித்து விட்டேன். ஆனால், என்னை எவரும் நம்ப மறுக்கின்றனர். இருந்தும் மீண்டும் சொல்கிறேன்.

    எனக்கு இந்தியாவிலிருந்து வெளியே ஹாலிவுட் உட்பட எந்த அன்னிய மொழி படங்களிலும் நடிக்க அழைப்பு வரவில்லை.

    மேற்கத்திய திரைப்பட துறையை சார்ந்த பலருடன் நான் பழகியுள்ளேன். எனக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைத்துறையை சார்ந்த பல திறமையானவர்களுடன் நல்ல நட்பும் உண்டு.

    ஆனால், என்னை எவரும் ஒரு நல்ல வேடத்திற்காக இதுவரை அங்கிருந்து அழைத்ததில்லை.

    என்னை ஏற்று கொள்ள கூடிய பார்வையாளர்களுக்கு பிடித்தமான படங்கள் அளிக்க நான் இன்னும் கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனக்கென ஒரு பாணியை வகுத்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ப்ரூஸ் திகழ்ந்தார்
    • ஒவ்வொரு நொடியையும் அவருடன் செலவிடுகிறோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

    1990களில் முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ப்ரூஸ் வில்லிஸ் (Bruce Willis).

    வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, அவற்றில் தனி முத்திரையுடன் நடித்து, பிற முன்னணி ஹாலிவுட் கதாநாயகர்களான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், சில்வெஸ்டர் ஸ்டாலோன், ஜாக்கி சான் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக தனது திரைப்படங்களையும் வசூலை குவிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படங்களாக அமைத்து கொண்டார்.

    தற்போது 68 வயதாகும் ப்ரூஸ் வில்லிஸிற்கு எம்மா ஹெமிங் எனும் மனைவியும் மேபல் மற்றும் எவ்லின் என இரு மகள்களும் உள்ளனர்.

    துரதிர்ஷ்டவசமாக, கடந்த பிப்ரவரி மாதம் "ஃப்ரன்டோ டெம்போரல் டிமென்சியா" (FTD) எனப்படும் மருத்துவ தீர்வு இல்லாத மூளை நோயினால் ப்ரூஸ் பாதிக்கப்பட்டார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிவித்தனர்.

    இத்தகவல், உலகெங்கும் உள்ள ப்ரூஸ் வில்லிஸின் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    "சில வருடங்களாகவே ப்ரூஸ் வாழ்வில் நல்ல நாட்களும், கெட்ட நாட்களும் அதிகம் இருந்தாலும், 2 மாதங்களாக அவருக்கு கெட்ட நாட்களையே அதிகம் அனுபவிக்கும்படி உள்ளது. இது எங்கள் மொத்த குடும்பத்தையும் ஒன்றாக இணைத்துள்ளது. அவர் வாழ்வில் இன்னும் எத்தனை நாட்கள் மீதமுள்ளது என தெரியவில்லை. எனவே, கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் அவருடன் இருந்து முழுவதுமாக உணர்ந்து செலவிடுகிறோம்" என ப்ரூஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


    மூளை திசுக்களை தாக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பு, ஆதரவு, அரவணைப்பு மிக முக்கியம் என்றும் அது நோயின் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும் என்றும் நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, "ஜான் மெக்லேன்" எனும் நியூயார்க் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் ப்ரூஸ் வில்லிஸ் கதாநாயகனாக நடித்து 1988ல் வெளிவந்த டை ஹார்டு (Die Hard) திரைப்படம் 45 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமெரிக்காவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×