என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்விளக்கு ஒளியில் தோன்றிய சிவபெருமான்"

    • விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில்.
    • மின்விளக்கு ஒளியில் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரதராமியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    இரவு 7 மணி அளவில் கோவில் உட்புற சுவற்றில் மின்விளக்கு ஒளியில் விநாயகர் சன்னதியின் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.

    இதன்மூலம் சிவபெருமான் காட்சி அளித்ததாக பக்தர்கள் பரவச மடைந்தனர். இதனைக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கினர்.

    மின்விளக்கு ஒளி தெரியும் இடத்திற்கும் சிவலிங்கம் ஒளி உருவான இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் மின்விளக்கு எரிந்தவுடன் சிவலிங்கம் தென்பட்டது. பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது.

    ×