search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஞ்சேநயர்"

    • பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.
    • வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், சாந்தியும், நிம்மதியும் தரவல்லது.

    அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை மிக்க பஞ்சமுக அனுமன்.

    அனுமனின் ஐந்து முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும்,

    அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும்,

    ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால்,

    வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் அஞ்சிலே ஒன்று பெற்ற அருள் குமரன் அனுமன்.

    அனுமனின் தாடை நீண்டு இருக்கும்.

    ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.

    கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால்

    அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.

    தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள்,

    பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.

    மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.

    வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள்

    முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும்.

    மேல் முகம் ஸ்ரீ ஹயக்கிரீவர் முகம். இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும்,

    சொல்வன்மையையும், சகலகலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர்.

    சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்சநேயராக வழிபாடு செய்யும்போது

    உங்களுக்கும் சொல்வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.

    • ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி சனி, ராகு, கேது துன்பங்களிலிருந்து விடுபடலாம்.
    • வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்த திருத்தலமாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திகழ்கிறது.

    நாமக்கல் என்றாலே அனைவரது நினைவிற்கு வருவது ஆஞ்சநேயர் திருவுருவமாகும்.

    அத்தகைய சிறப்பு பெற்றவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

    நாமக்கல், செந்தமிழ்க் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த ஊர்,

    சிறந்த குடவரைக் கோவில் மும்மூர்த்திகளும் வழிபட்ட புண்ணியத்தலம்,

    வாமன அவதாரச் சிறப்பு, சங்கர நாராயணர் சிறப்பு,

    அருள் தரும் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு செய்தல் ஆகியவை சிறப்பாகும்.

    நாமகிரி தாயார் கணிதமேதை ராமானுஜருக்கு கனவில் தோன்றி கணிதத்தை எளிதாக்கிய திருத்தலம்.

    நாமகிரி குன்றில் நரசிம்மமூர்த்தி ஆஞ்சநேயரால் பிரதிஷ்டை செய்யப் பெற்ற சிறப்புக்குரியது.

    ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி சனி, ராகு, கேது துன்பங்களிலிருந்து விடுபடலாம்.

    வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்த திருத்தலமாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திகழ்கிறது.

    இந்த கோவிலின் பெருமைகளை அறிந்து ஏராளமான வெளிநாட்டினர் இங்கு வருகை தருகிறார்கள்.

    • நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன.
    • கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன.

    தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணை காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு.

    புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும்

    வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம்.

    இங்கு உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை,

    தளர்ச்சி இன்மை, வாக்கு சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும்.

    நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன.

    தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன.

    நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால்

    நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

    • அருள்மிகு நரசிம்மர் -நாமகிரி தாயார் கோவில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது.
    • கணிதமேதை ராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர்.

    அருள்மிகு நரசிம்மர் -நாமகிரி தாயார் கோவில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது.

    கணிதமேதை ராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர்.

    நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது.

    இது ஒரு குடைவரை கோவில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

    புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது.

    இங்குள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.

    • ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபட்டால் சனீஸ்வரர், ராகு பகவான் இடையூறுகளில் இருந்து விடுபடலாம்.
    • ஆஞ்சநேயர் இங்கு திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.

    முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள்.

    பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதன்

    பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை

    ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடுபடுகிறார்கள்

    என்பதற்காகத் தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.

    கோபுரம் இல்லை

    லோகநாயகனான ஸ்ரீ நரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால்  

    தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார்.

    • இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது.
    • தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

    இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது.

    பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது.

    இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.

    தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

    எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

    இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேர் எதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார்.

    மிக பிரம் மாண்டமாக காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.

    • அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார்.
    • ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார்.

    ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைப் பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார்.

    பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார்.

    அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார்.

    அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர்,

    தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார்.

    மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.

    அப்போது ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்று

    அசிரீரி ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார்.

    ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்தார்.

    ஆஞ்சநேயர் விட்டுப் போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர்

    நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.

    • 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.
    • 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது.

    தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்.

    புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும்.

    1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.

    நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது.

    இந்த கோவில் இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

    18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது.

    வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    • நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோவில் உள்ளது.
    • இது ஒரு குடைவரை கோவில்.

    நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறம் அருள்மிகு அரங்கநாதன் கோவில் உள்ளது.

    இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    இது ஒரு குடைவரை கோவில்.

    இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.

    • திருமணம் ஆகாதவர்கள் ஆஞ்சநேயரை தியானித்து வந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும்.
    • நிம்மதியான வாழ்க்கை அமையும். எடுத்தக் காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக நடக்கும்.

    திருமணம் ஆகாமல் காலம் கடந்தால் அவர்கள் ஆஞ்சநேயரை தியானித்து வந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும்.

    திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான்.

    நல்ல வேலை வாய்ப்பு ஏற்படும்.

    திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும்.

    நிம்மதியான வாழ்க்கை அமையும்.

    எடுத்தக் காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக நடக்கும்.

    சனி பகவானின் பாதிப்புக்குட்பட்டு கஷ்டப்படுகின்றவர்கள் அவசியம் தினசரி ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால்

    சனிபகவானின் பாதிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    இதுபோன்ற எண்ணற்ற நலன்களை அளிப்பார் ஆஞ்சநேயர் சுவாமி.

    ஜெய்... ஜெய்.... அனுமான்!

    • ஆஞ்சநேய சுவாமியின் தீவிரப் பக்தர்களாக இருப்பவர்களுக்கு மனத் தெளிவு பெருகும்.
    • ஆபத்தான எந்தப் பிரச்சினைகளும் விலகிவிடும். அஞ்சா நெஞ்சம் ஏற்படும்.

    ஆஞ்சநேய சுவாமியைப் பூஜிப்பதினால் நிம்மதியான வாழ்க்கை அமைந்து, சந்தோஷத்தைக் கொடுக்கும்.

    சனி ராகு கேது செவ்வாய் போன்ற கிரகங்களின் தொல்லைகளினால் கஷ்டப்படுபவர்கள் ஆஞ்சநேயரை தோத்திரம் செய்து வந்தால் இன்னல்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.

    கல்வி சரியாக வராமல் மந்த புக்தியுடையவர்களுக்கு புத்திக் கூர்மை ஏற்பட்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    பயந்த சுபாவம் உள்ளவர்கள் பயம் தெளிந்து தைரியசாலியாக செயல்படுவார்கள்.

    ஆஞ்சநேய சுவாமியின் தீவிரப் பக்தர்களாக இருப்பவர்களுக்கு

    மனத் தெளிவு பெருகும்.

    ஆபத்தான எந்தப் பிரச்சினைகளும் விலகிவிடும்.

    அஞ்சா நெஞ்சம் ஏற்படும்.

    சத்ருபயம் நீங்கும்.

    பீடைகள் ஒழியும்.

    வியாபாரம் விருத்தியாகும்.

    செல்வ வளம் பெருகும்.

    நல்ல மனைவி அமைவாள்.

    • நினைத்தக் காரியங்கள் சித்தியாகும். துன்பம் நீங்கி சந்தோஷம் வரும்.
    • குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு ஆஞ்சநேய சுவாமிகளால் குழந்தைச் செல்வம் உண்டாகும்.

    ஆஞ்சநேயரை தினசரி தியானித்து தொழுபவர்களுக்கு தரித்திரம் நீங்கி சுபீட்சம் வரும்.

    நினைத்தக் காரியங்கள் சித்தியாகும். துன்பம் நீங்கி சந்தோஷம் வரும்.

    தங்களைப் பிடித்திருந்த தோஷங்கள் நீங்கும். நலிந்து போன வியாபாரம் புதுப்பொலிவுடன் நடக்கும்.

    எதிரியாக நடந்து வந்த நண்பர்கள் நட்புடன் பழகுவார்கள். பகையாகிப் போன உறவினர்கள் பாசத்துடன் பழகுவார்கள்.

    ஆஞ்சநேயரை அனுதினம் பூஜை செய்து வந்தால் யாராலும் குணப்படுத்த முடியாத கடுமையான வியாதிகள் கூட விரைவில் குணம் அடையும்.

    வாழ்க்கையில் வெறுப்படைந்து மனசஞ்சலத்தால் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் கூட ஆஞ்சநேய சுவாமியை தியானித்து வந்தால், மனம் தெளிவுற்று அந்த எண்ணத்திலிருந்து விடுபட்டு புது வேகத்துடன் செயல்படுவீர்கள்.

    குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு ஆஞ்சநேய சுவாமிகளால் குழந்தைச் செல்வம் உண்டாகும்.

    உடன் பிறந்தவர்களினால் ஏற்படும் கெடுதல்கள் கூட விலகிவிடும்.

    ×