என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கே.எஸ்.பாரத்"
- முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
- இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஜோகன்ஸ்பர்க்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்று சமனில் முடிந்தது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
ஒருநாள் தொடர் நிறைவடைந்த உடன் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எஸ்.பாரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத்.