என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமர் கோயில் கும்பாபிஷேகம்"
- ஏழு கோயில்களும் அடுத்த நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முனிவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு கோயில்களைக் கட்டும் பணியும் வேகம் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில், 161அடி உயர ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியது. இது, 4 மாதங்களில் நிறைவடையும் என்று கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ராமர் கோயிலின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன், இங்குள்ள வளாகத்தில் ஏழு முனிவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு கோயில்களைக் கட்டும் பணியும் வேகம் பெற்றுள்ளது என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த ஏழு கோயில்களும் அடுத்த நான்கு மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோயில் கட்டும் பணியை விரைவுபடுத்தவும், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் பணியாளர்களை அதிகரிப்பது குறித்தும், தேவைப்பட்டால் தொழில்நுட்பக் குழுவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்க இன்று முதல் மூன்று நாள் ஆய்வுக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மிஸ்ரா இன்று அயோத்தி சென்றடைந்தார்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கும்பாபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கும்பாபிஷேகம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு.
- கும்பாபிஷேகத்திற்கான விருந்தினர் பட்டியல் பெரிதாகி வருகிறது.
அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஜனவரி 22 அன்று, அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, இந்த நிகழ்வு இன்னும் பல ஆண்டுகளாக நினைவில் வைக்கப்படும் அளவுக்கு பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
எனவே, அறக்கட்டளை சார்பில் நாடு முழுவதும் உள்ள புனிதர்கள், பாதிரியார்கள் மற்றும் மதத் தலைவர்களை அழைப்பது மட்டுமல்லாமல், 1992 ஆம் ஆண்டில் அயோத்தி பகுதியில் நிர்வகித்த முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாக அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. முக்கிய தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள் மற்றும் பத்ம விருதுகளுடன் கௌரவிக்கப்பட்ட நபர்கள் என்று விருந்தினர் பட்டியல் பெரிதாக இருக்கிறது.
தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய பட்டியல் கவனமாகத் தொகுக்கப்பட்டு இருக்கிறது என்று அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறினார். விருந்தினர் பட்டியலில் ஆன்மீக தலைவர் தலாய் லாமா, பாபா ராம்தேவ், அம்மா அமிர்தானந்தமயி, முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் கவுதம் அதானி, டாடா குழுமத்தின் நடராஜன் சந்திரசேகரன், எஸ்.என். எல் அண்ட் டி குழுமத்தின் சுப்ரமணியன் மற்றும் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீட்சித் ஆகியோர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்களை கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அயோத்திக்கு வர வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
"இருவரும் வயதில் பெரியவர்கள், வயதைக் கருத்தில் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை இருவரும் ஏற்றுக்கொண்டனர்" என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறினார்.
பா.ஜ.க. நிறுவன உறுப்பினரான அத்வானிக்கு இப்போது 96 வயது, ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயது. ஆனால் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து விழாவுக்கு அழைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வயது 90. விழாவுக்கு அத்வானி மற்றும் ஜோஷி வர வேண்டாம் என்று கூறிவிட்டு,அதே வயதையுடைய தேவ கவுடா அழைக்கப்பட்டு இருக்கிறார்.
ராமர் ரத யாத்திரை மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களுக்கு அத்வானி மிக முக்கிய பங்குவகித்தார். ராமர் ரத யாத்திரை என்பது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஊக்குவிக்க எல்.கே. அத்வானி, பா.ஜ.க. நடத்திய அரசியல் மற்றும் மத ஊர்வலம்.
1990 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தடைகளை எதிர்கொண்டு, ஏராளமான மக்கள் மத்தியில் உரையாற்றி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என வாதிட்டவர் அத்வானி. அவரை ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிற்கு வயதை காரணம் காட்டி வர வேண்டாம் என்று சொன்னது விமர்சனத்திற்கு உள்ளானது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரவேண்டாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அறக்கட்டளை சார்பிலான குழு இன்று எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்