என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முஸ்தபிசுர் ரகுமான்"
- வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
- டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்
மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
- சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.
துபாய்:
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், வங்காளதேச அணியின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்