என் மலர்
நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா இந்தியா தொடர்"
- இந்திய அணி 211 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
கெபேஹா:
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது.
இந்திய அணியில் டெஸ்ட் தொடருக்கு தயார்படுத்த பயிற்சியில் ஈடுபட வசதியாக ஒதுங்கிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரிங்கு சிங் புதுமுக வீரராக இடம் பிடித்தார்.
தென்ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பெலுக்வாயோ நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார்.
'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ருதுராஜ் கெய்க்வாட் (4 ரன்) நன்ரே பர்கர் வீசிய அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நடுவரின் முடிவை எதிர்த்து அவர் செய்த அப்பீலுக்கு பலன் கிட்டவில்லை. அடுத்து வந்த திலக் வர்மா 10 ரன்னில் நடையை கட்டினார்.
இதைத் தொடர்ந்து கேப்டன் லோகேஷ் ராகுல், தொடக்க வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 65 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அவர் தொடர்ச்சியாக அடித்த 2-வது அரைதம் இதுவாகும். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது ஸ்கோர் 250 ரன்களை தாண்டும் போல் தெரிந்தது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ரன்வேகம் தளர்ந்து போனது.
அணியின் ஸ்கோர் 114 ரன்னாக உயர்ந்த போது (26.2) சாய் சுதர்சன் (62 ரன், 83 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) லிசாத் வில்லியம்ஸ் வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் சிக்கினார். அதன் பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. சஞ்சு சாம்சன் 12 ரன்னில் போல்டு ஆனார். மறுமுனையில் 18-வது அரைசதம் விளாசிய லோகேஷ் ராகுல் 56 ரன்னிலும் (64 பந்து, 7 பவுண்டரி) ரிங்கு சிங் 17 ரன்னிலும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர்.
அக்ஷர் பட்டேல் (7 ரன்), குல்தீப் யாதவ் (1 ரன்), அர்ஷ்தீப் சிங் (18 ரன்), அவேஷ் கான் (9 ரன்) ஆகியோரும் நிலைக்கவில்லை. 46.2 ஓவர்களில் இந்திய அணி 211 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் நன்ரே பர்கர் 3 விக்கெட்டும், பீரன் ஹென்ரிக்ஸ், கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 212 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு டோனி டி ஜோர்ஜியும், ரீஜா ஹென்ரிக்சும் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றிப்பாதையை சுலபமாக்கினர். ஹென்ரிக்ஸ் 52 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வான்டெர் டஸன் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய டோனி டி ஜோர்ஜி 109 பந்தில் தனது முதலாவது சதத்தை எட்டினார்.
தென்ஆப்பிரிக்கா 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி டி ஜோர்ஜி 119 ரன்களுடனும் (122 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் மார்க்ரம் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. கடைசி ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. அபிஷேக் சர்மா 7 ரன்னில் வெளியேறினார்.
சஞ்சு சாம்சனுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். இந்த ஜோடி 66 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் 21 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக ஆடி 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 50 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்சி 3 விக்கெட் வீழ்த்தினார்.
- முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 141 ரன்னில் ஆல் அவுட்டானது.
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 50 பந்தில் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 ரன்னும், சூர்யகுமார் 21 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் கோட்சி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
அதிகபட்சமாக கிளாசன் 25 ரன்னும், கோட்சி 23 ரன்னும், ரிக்கல்டன் 21 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆட்ட நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்டது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோர் தலா 3 விக்கெட்டும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
- அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார்.
சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் 2வது சதம் இதுவாகும். அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.
- சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 2 ஆவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகியிருந்தார்
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் தான் சந்தித்த 2 ஆவது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகியிருந்தார்.
வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் அடித்து சஞ்சு சாம்சன் அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.
தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் எடுத்துவிட்டு அடுத்த 2 போட்டிகளில் டக் அவுட்டாகி சஞ்சு சாம்சன் அதிர்ச்சி அளித்துள்ளார்.
- முதலில் பேட் செய்த இந்தியா 219 ரன்களைக் குவித்தது.
- இந்திய அணியின் திலக் வர்மா சதமடித்து அசத்தினார்.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 2வது பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
2வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், பாண்ட்யா 18 ரன்னிலும், ரிங்கு சிங் 8 ரன்னிலும் வெளியேறினர்.
அதிரடியைத் தொடர்ந்த திலக் வர்மா முதல் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இந்தியா திலக் வர்மா சதத்தால் 219 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை எடுத்தது.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்கம் முதல் அந்த அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் விரைவில் விக்கெட்களை இழந்தனர்.
ரிகலடன் 20 ரன்னும், ஹென்ரிக்ஸ் 21 ரன்னும், மார்கிரம் 29 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும், டேவிட் மில்லர் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கிளாசன் 41 ரன் எடுத்து வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய மார்கோ ஜேன்சன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 19வது ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 24 ரன்களை குவித்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை மட்டுமே எடுத்தது.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டில் இந்திய அணி 8-வது முறையாக டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அணியும் ஒரு ஆண்டில் எட்டு முறை 200 ரன்கள் அடித்ததில்லை. இந்திய அணி முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது.
- டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 283 ரன்களைக் குவித்தது.
- திலக் வர்மா, சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்தனர்.
ஜோகனஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 36 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய திலக் வர்மா சஞ்சு சாம்சனுடன் இணைந்து தூள் கிளப்பினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
சஞ்சு சாம்சன் 51 பந்தில் சதமடித்தார். அவரை தொடர்ந்து திலக் வர்மா 41 பந்தில் சதமடித்தார்.
இறுதியில், இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இந்தியா 283 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜோகனஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அபிஷேக் சர்மா 36 ரன்னில் அவுட்டானார்.
திலக் வர்மா சஞ்சு சாம்சனுடன் இணைந்து கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் 10 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
ஸ்டபஸ், மில்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தது. மில்லர் 36 ரன்னும், ஸ்டப்ஸ் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா வென்றது.
- இதன்மூலம் இந்திய அணி 3-1 என டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
ஜோகனஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.
முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதமடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்தியா வென்றது.
- அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 109 ரன்கள் குவித்தார்.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெற்றது.
முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதமடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.
இந்த டி20 போட்டியில் 10வது ஓவரில் சஞ்சு சாம்சன் அடித்த பந்து மைதானத்தில் இருந்த ஒரு பெண்ணின் கன்னத்தில் பலமாக தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த பெண் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலானது.
தான் அடித்த பந்து மைதானத்தில் இருந்து பெண்ணை தாக்கியது தெரிந்ததும் உடனடியாக சஞ்சு சாம்சன் அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.