என் மலர்
நீங்கள் தேடியது "வாயிலார் நாயனார் குரு பூஜை"
- சிவனை நினைத்து சிவபதம் அடைந்த நாயனார், வாயிலார் நாயனார்.
- சென்னை திருமயிலையில் அவதரித்தவர்.
சதாசர்வகாலமும் சிவனை நினைத்து சிவபதம் அடைந்த நாயனார், வாயிலார் நாயனார். சென்னை திருமயிலையில் அவதரித்தவர். இவரைப் பற்றிய பெரிய கதைகளும் வரலாற்று குறிப்புகளும் இல்லை என்றாலும்கூட, இவருடைய சன்னதி மயிலை கற்பகாம்பாள் சன்னதியில் உள்ளது. சுந்தரரும் சேக்கிழாரும் இவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
``வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் எப்பொழுதும் வழங்க வேண்டும்'' என்று அப்பர் பாடி உள்ளபடி மனதையே ஆலயம் ஆக்கிக் கொண்டு, ஞானத்தை திருவிளக்கு ஆக்கி, ஆனந்தத்தை அவருக்கு தருகின்ற திருமஞ்சனமாக்கி, அன்பு என்கிற திரு அமுது படைத்து பூஜை செய்தவர் வாயிலார் நாயனார்.
மனதில் எப்போதும் சிவசிந்தனையும், சிவபூஜையும் செய்து கொண்டு இருந்ததே இவருடைய பேற்றுக்கு காரணம்.
``மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி
உறவாதி தனையுணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி
இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி,
அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.''
இவரது வழிப்பாட்டின் வலிமையை இந்த பாடல் உணர்த்துகிறது. அவருடைய குருபூஜை மார்கழி ரேவதி நட்சத்திரத்தில் அதாவது இன்று நடைபெறுகிறது.