என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குற்றவியல் திருத்த சட்ட மசோதா"
- 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
- நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிவாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "கால அவகாசம் அளிக்காமல், உரிய ஆலோசனைகளை பெறாமல் அவசர கதியில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரப்பட்டுள்ளன. 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அனைத்து துறைகளுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் தேவை.
3 குற்றவியல் சட்டங்களிலும் தவறுகள் உள்ளன. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்
- பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் கடந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
அதே சமயம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஒட்டி விபத்து நடந்து யாரேனும் மரணமடைந்தால், உடனடியாக ஓட்டுநர் காவல்துறைக்கோ அல்லது நீதிபதியையோ சந்தித்து புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீண்ட விவாதத்திற்கு பின் திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறியது.
- ஏற்கனவே மக்களவையிலும் திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேறியது.
புதுடெல்லி:
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் பாராளுமன்ற நிலைக்குழு (உள்துறை) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. இக்குழு சில ஆலோசனைகளுடன் தனது பரிந்துரையை கடந்த மாதம் சமர்ப்பித்தது.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த 3 மசோதாக்களும் மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பெருமளவிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் அதிக அளவில் இருந்தனர். இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆளும் கட்சி எம்.பிக்களே அவையில் இருந்த நிலையில் இந்த மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று 3 திருத்தப்பட்ட சட்டங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நீண்ட நேரம் விவாதம் நடத்தினார். இதன் மீதான விவாதம் முடிவடைந்த நிலையில் 3 மசோதாக்களும் நிறைவேறின. இதையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்