என் மலர்
நீங்கள் தேடியது "சாக்ஷி மாலிக்"
- பிரிஜ்பூஷன் உறவினர் தலைவராக தேர்வானதைக் கண்டித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என்றார் சாக்ஷி மாலிக்.
- மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் முடிவுக்கு நடிகை ரித்திகா சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், புதிய தலைவராக ஒரு பெண் தான் வரவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண்கூட இல்லை. பிரிஜ் பூஷனின் உறவினரை தான் தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகை ரித்திகா சிங் தனது எதிர்ப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், வீராங்கனை சாக்ஷி மாலிக்கை இப்படி பார்க்கும்போது இதயம் உடைகிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த சாக்ஷி மாலிக் இவ்வளவு ஆண்டுகள் கடின உழைப்பினை, கனவுகளை நம்பிக்கைகளை கைவிட்டு 'நான் விலகுகிறேன்' என கூறுவது பேரழிவானது. தற்போதும், போராட்டத்தின் போதும் சாக்ஷி மாலிக் எதிர்கொண்ட அவமரியாதை கொடுமையானது என பதிவிட்டுள்ளார்.
நடிகை ரித்திகா சிங் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.
- இந்திய அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
முதலாவது உலக ரேங்கிங் போட்டியான ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி அறிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட முதல் அணி இதுவாகும். அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரருமான பஜ்ரங் பூனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோர் இடம் பெறவில்லை.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், சஞ்சய் சிங்குடன் தான் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. புதிய கூட்டமைப்பு அமைப்பு அல்லது தற்காலிகக் குழுவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சஞ்சய் சிங்கிற்கு மல்யுத்த கூட்டமைப்பு ஆணையத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன். பிரிஜ் பூஷன் என் குடும்பத்தைக் குறிவைக்கிறார். எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.
#WATCH | After WFI suspension, former wrestler Sakshee Malikkh says, "We only had a problem with Sanjay Singh. We don't have any problem with the new federation body or the Ad-hoc committee. I request PM Modi ji, Amit Shah ji to ensure that Sanjay Singh has no involvement in WFI.… pic.twitter.com/F66hegGM5z
— ANI (@ANI) January 3, 2024
- டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் 100-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் எங்கள் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர் என்றனர்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னணி வீரர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், மகளிர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 2 முறை இடைநீக்கம் செய்யப்பட்டு, கூட்டமைப்பை தற்காலிகக் குழு நிர்வகித்து வருகிறது. கடந்த 2023 ஜனவரியிலிருந்து தேசிய சாம்பியன்கள் மற்றும் பிற போட்டிகள் எதுவும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் 100-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் எங்கள் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர் என்றனர்.
இம்மூன்று மல்யுத்த சாம்பியன்களும் தங்களின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி, அவர்களுக்கு எதிராக இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், 'சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பே.. எங்களை இந்த 3 வீரர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்தப் போராட்டத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகித்து வரும் தற்காலிகக் குழுவை கலைத்துவிட்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்திருக்கும் கூட்டமைப்பு நிர்வாக அமைப்பை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- இந்தியா வந்தடைந்த வினேஷ் போகத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பினார். இன்று, வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வினேஷ் போகத்தை வரவேற்க அவரது சகோதரர் ஹரிந்தர் சிங் வந்திருந்தார்.
விமான நிலையத்திற்கு வந்திருந்த மல்யுத்த வீரர்களான சாக்க்ஷி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், 'வெல்கம் சாம்பியன் வினேஷ் போகத்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.