என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தற்காலிக குழு"
- ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.
- இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அமைத்தது.
இதில், இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருந்தனர்.
வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொண்டு வந்தன.
இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று கூட்டமைப்பின் தற்காலிகக் குழுவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு குழு கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.
அடுத்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.
அந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம்.
- மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என அறிவிப்பு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாடப் பணிகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக குழு அமைக்க கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்