search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரிசுதாரர் நியமன வசதி"

    • செப்டம்பர் 30 முன்னர் கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது
    • முதலீட்டாளர்கள் இவ்வசதியை பயன்படுத்தி கொள்ள நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்

    செபி (SEBI) எனப்படும் இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம், டிமேட் (demat) மற்றும் மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) கணக்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், தங்கள் கணக்கிற்கு வாரிசுதாரர்களை நியமனம் (nomination) செய்வதற்கு டிசம்பர் 31 வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

    தற்போது அந்த காலக்கெடுவை செபி, 2024 ஜூன் 30 வரை நீடித்துள்ளது.

    "சந்தையில் பங்கேற்பவர்களிடமிருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில் நாமினேஷன் சமர்ப்பிக்க கடைசி தேதியை ஜூன் 30 2024 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என செபி இது குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

    என்எஸ்டிஎல்-இன் (NSDL) இணைய பக்கத்தில் முதலீட்டாளர்கள், நாமினி (nominee) பெயருடன் மற்ற விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களை தனது வாரிசுதாரராக நாமினேஷன் செய்யும் போது ஒவ்வொரு நாமினிக்கும் எவ்வளவு பங்குகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் முதலீட்டாளர் பதிவு செய்ய இயலும்.

    முதலீட்டாளர்களின் சொத்துக்கள் சட்டபூர்வ வாரிசுகளுக்கு துரிதமாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதலீட்டாளர்கள் சரிவர இந்த வசதியை பயன்படுத்த தவறியதால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு கொண்டே சென்றது குறிப்பிடத்தக்கது.

    முன்னர் செப்டம்பர் 30 என இருந்த காலக்கெடு, பிறகு டிசம்பர் 31 என நீட்டிக்கப்பட்டது.

    காலக்கெடுவிற்குள் நாமினேஷன் செய்ய தவறும் பட்சத்தில் முதலீட்டாளரின் கணக்கு செயல் இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் பல சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு பிறகுதான் மீண்டும் இயங்க வைக்க முடியும் என்றும் கால விரயத்தை தவிர்க்க உடனடியாக இந்த வசதியை முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பங்கு வர்த்தனை ஆலோசகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    பான் (PAN) கணக்கு வைத்திருப்பவர்களில் சுமார் 25 லட்சம் முதலீட்டாளர்கள் தங்கள் நாமினேஷனை இன்னும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×