search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரிக் வாகனங்கள்"

    • 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து
    • டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

    மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மக்களிடேயே ஊக்குவிக்கும் முயற்சியாக தெலங்கானா அரசின் புதிய அறிவிப்பு இன்று முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. மின்சார வாகனங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் விதமாக 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வர்த்தக பயன்பாட்டு பயணிகள் வாகனங்கள், மின்சார ஆட்டோ ரிக்சா, மின்சாரத்தில் இயங்கும் இலக ரக சரக்கு வாகனங்கள், டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

    2026-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தெலங்கானாவில் வாங்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் இந்த 100 சதவீத விலக்கு பொருந்தும். தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்படும் மின்சார பேருந்துகளுக்கு மட்டும் வாழ்நாள் வரி, கட்டண விலக்கு அமலில்  இருக்கும்.

    • அமெரிக்காவை தவிர, சீனாவிலும் ஜெர்மனியிலும் டெஸ்லா உற்பத்தி செய்து வருகிறது
    • தொடக்கத்தில் பிஒய்டி, பேட்டரி தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டு வந்தது

    கடந்த 2003ல், அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க் (Elon Musk), தொடங்கிய பேட்டரி கார் நிறுவனம், டெஸ்லா (Tesla).

    அமெரிக்காவில் பெருமளவு உற்பத்தி ஆனாலும், பெருகி வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்காக, இந்நிறுவனம் கார் உற்பத்தியை சீனாவிலும், ஜெர்மனியிலும் நடத்தி வருகிறது.


    2023 வருட மூன்றாம் காலாண்டில் மட்டும் 4,30,488 மின்னணு கார்களை உற்பத்தி செய்தது.

    கார்கள் விற்பனை மூலம் 2022-ஆம் வருட வருமானமாக டெஸ்லா, $81,462 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியது.

    இந்நிலையில், சீனாவின் ஷென்சன் (Shenzen) பகுதியை சேர்ந்த மற்றொரு முன்னணி மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி (BYD), உலகளவில் முதல் இடத்தை பிடிக்க உள்ளது.

    பிஒய்டி, 2023-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் 5,26,000 கார்களை தயாரித்துள்ளது. 2023 முழு ஆண்டில் 3 மில்லியன் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளது.

    1995ல் சீனாவின் ஷென்சன் பகுதியில் வேங் சுவான் ஃபு (Wang Chuanfu) என்பவர் தொடங்கிய பிஒய்டி, முதலில் ஸ்மார்ட்போன், மடிக்கணினி உட்பட பல மின்னணு சாதனங்களுக்கு பேட்டரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது. விலை உயர்ந்த ஜப்பானிய பேட்டரிகளை விற்பனையில் முந்திய பிஒய்டி பிறகு கார் தயாரிப்பிலும் கால் பதித்தது.


    ஒரு மின்னணு கார் அல்லது இரு சக்கர வாகனத்திற்கு முக்கிய பாகமாக கருதப்படுவது அதனை இயக்கும் பேட்டரிதான். பேட்டரி தயாரிக்கும் தொழிலில் மிகுந்த அனுபவம் உள்ள நிறுவனம் என்பதாலும், தங்கள் பேட்டரியை வைத்தே தங்கள் கார்களை தயாரிப்பதால் பெருமளவு செலவினங்கள் குறைவதால், விலை குறைவான கார்களை பிஒய்டி-யால் தயாரிக்க முடிகிறது. குறைந்த செலவில் லாபம் ஈட்டி, அதிவேகமாக கார்களை பிஒய்டி தயாரிக்க இது முக்கிய காரணம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    பல வருடங்களாக பேட்டரி கார் தயாரிப்பில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள டெஸ்லா, போட்டியை எவ்வாறு சமாளிக்க போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.

    ×