என் மலர்
நீங்கள் தேடியது "ஜேஸ்மின் ஷா"
- அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
- அவரது வீட்டில் இன்று சோதனை நடத்தப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு.
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என அக்கட்சியின் மந்திரி ஆதிஷி தெரிவித்திருந்த நிலையில், டெல்லி மாநில அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜேஸ்மின் ஷா கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அனுப்பப்பட்ட அனைத்து சம்மன்களும் சட்டவிரோதமானது. இதில் இருந்து பா.ஜனதா மக்களவைக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க நினைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஒத்துழைக்க அவர் தயாராக இருக்கிறார்.
நேற்று இரவு முதல் எங்களுக்கு கிடைத்த செய்தி என்னவென்றால், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்படுவார் என்பதுதான்.
எங்கள் தலைவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒன்று நன்றாக புலப்படும். மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டபோது, பா.ஜனதா அவர் கைது செய்யப்படுவார் என்றது. ஆனால் அமலாக்கத்துறை அதை மறுத்தது. இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல்தான் சஞ்சங்க சிங்கிற்கு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரமாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என பா.ஜனதா கூறி வருகிறது.
இவ்வாறு ஜேஸ்மின் ஷா தெரிவித்துள்ளார்.