என் மலர்
நீங்கள் தேடியது "ராமர் சிலை பிரதிஷ்டை"
- 22-ந்தேதி பிரதிஷ்டை விழா.
- கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சென்னை:
உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன. வருகிற 22-ந்தேதி பிரதிஷ்டை விழா நடைபெறுகின்றது. இதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் 10 அடி உயர ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்பட்டது. அதனை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பராசரன் பக்தர்கள் தரிசனத்திற்காக நேற்று மாலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் எஸ்.வேதாந்தம் ஆன்மீக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன், திருப்பதி தேவஸ்தான தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர்ரெட்டி, விஸ்வ இந்து பரிஷத் டி.டி.வி. அறங்காவலர் குழு உறுப்பினர் சங்க தலைவர் தலைவர் கோபால்ஜி மற்றும் நீதிபதிகள், தொழில் அதிபர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஏ.ஜே.சேகர் ரெட்டி பேசியதாவது:-
நாட்டின் பல்வேறு இடங்களில் ஸ்ரீராமருக்கு கோவில் இருந்தாலும் அவர் அவதாரம் நிகழ்ந்த அயோத்தியில் கோவில் இல்லாமல் இருந்த குறை தற்போது நீங்கியுள்ளது. வெகுவிரைவாக அயோத்தியில் பக்தர்கள் கனவை பிரதமர் மோடி நகவாக்க உள்ளார்.
பீடத்துடன் கூடிய 10½ அடி உயர ராமபிரான் சிலை பைபர் வாயிலாக செய்யப்பட்டது. இதனை வருகிற 26-ந்தேதி வரை தரிசிக்கலாம். தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
வேதாந்தம் பேசுகையில், ராமஜென்ம பூமி, 500 ஆண்டுகள் போராட்டம். ராமாயணத்தில் கல் மீது ராமபிரான் பாதம் பட்டதும் அகல்யாவிற்கு விமர்சனம் கிடைக்கிறது. அதுபோல் ராமனின் பார்வை பராசுரன் மீது பட்டதும் ராம ஜென்ம பூமிக்கு விமோசனம் கிடைத்தது. அயோத்தியில் நடக்கும் ராமர் பிரதிஷ்டைக்காக இங்கு விழா எடுக்கப்படுவது வரவேற்கதக்கது என்றார்.
மேலும் ராமர் சிலை திறப்பு விழாவையொட்டி இன்று முதல் 26-ந்தேதி வரை சிறப்பு சொற்பொழிவு மற்றும் பாடல், நடனம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு ஆரத்தி, 10.30 மணி முதல் 12 மணி வரை பஜனை, மாலை 6 மணிக்கு ஆரத்தி நடைபெறும். இந்தியாவிலேயே முதன் முறையாக ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்து கொண்டாடப்படுவது சென்னையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.