என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பப்பார் சுபாஷ்"
- மாடலாக இருந்து நடிகையான அவர் இப்பட வெற்றிக்கு பிறகு ரசிகர்களின் கனவுக்கன்னியானார்
- ரசிகர் பட்டாளம் இருந்தும் படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்
முன்னணி இயக்குனர்கள் மற்றும் கதாநாயகர்களின் திரைப்படங்கள், ரூ.100 கோடி வசூல் இலக்கை தொட்டால்தான் அதை வெற்றி படமாக இன்னாளில் கருதுகிறார்கள்.
இந்தி திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய கதாநாயகர்களின் படங்களும் ரூ.100 கோடி வசூலை எட்டுவது சாதாரணமாகி விட்டது.
கதாநாயகர்கள் மட்டுமின்றி மாதுரி தீஷித், ஸ்ரீதேவி, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் உள்ளிட்ட பலர் கதாநாயகியாக நடித்த இந்தி திரைப்படங்கள் ரூ.100 கோடி இலக்கை எட்டியுள்ளன.
ஆனால், பாலிவுட்டில் (இந்தி திரையுலகம்) முதல் முதலாக ரூ.100 கோடி வசூலை அள்ளி குவித்த வெற்றி பட கதாநாயகி இவர்களில் எவரும் அல்ல; கதாநாயகனும் 3 "கான்"களில் ஒருவர் அல்ல.
1982ல் பப்பார் சுபாஷ் (Babbar Subhash) இயக்கத்தில் வெளியான இந்தி திரைப்படம் டிஸ்கோ டான்சர் (Disco Dancer). இதில் கதாநாயகனாக மிதுன் சக்ரபொர்த்தியும் (மிதுன் Chakraborty) கதாநாயகியாக கிம் யஷ்பால் (Kim Yashpal) எனும் பிரபல மாடல் ஒருவரும் நடித்திருந்தனர்.
ஆடல், பாடல் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் 8 பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. மேலும், அரங்குகள் நிறைந்த காட்சிகளாக இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, ரஷியா, சினா, அரபு நாடுகள், துருக்கி, ஆப்பிரிக்க நாடுகள் என திரையிட்ட இடங்களிலெல்லாம், டிஸ்கோ டான்சர், வெற்றி வாகை சூடியது.
ஒரு இந்தி திரைப்படம் வசூலில் ரூ.100 கோடிக்கும் மேல் முதல் முதலாக தொட்டது தயாரிப்பாளர்களே எதிர்பாராத ஒரு ஆச்சரியம்.
மிதுனுக்காக பெண் ரசிகைகளும், கிம் யஷ்பாலிற்காக ஆண் ரசிகர்களும் இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தனர்.
பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக கிம் வலம் வந்தார்.
டிஸ்கோ டான்சர் வெற்றிக்கு பிறகு கிம்மிற்கென பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தும் படிப்படியே திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார் கிம்.
கிம்மின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல்கள் இல்லை.
1985ல், ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து, தமிழில் "பாடும் வானம்பாடி" எனும் பெயரில் டிஸ்கோ டான்சர் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்