என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கு எந்திரம்"

    • வாக்கு செலுத்தியதற்கான ரசீது வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சேகரிக்க வேண்டும்.
    • அந்த ரசீதுகள் 100 சதவீதம் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

    வாக்கு எந்திரம் (EVM), வாக்கு செலுத்தியதற்கான ரசீது வழங்கும் இயந்திரம் (VVPAT) ஆகியவை மீது சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக கூறிவருகின்றன.

    இதுகுறித்து தங்களிடம் விரிவான வகையில் விவரிக்க நேரம் ஒதுக்கி தருமாறு தேர்தல் ஆணையத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், தேர்தல் ஆணையர் எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதினார். அதில் "இந்தியா கூட்டணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து குறிப்பிட்டு, கூட்டணியின் மூன்று பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு" குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரம் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது என பதில் அளித்துள்ளது.

    தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் கேள்வி பதில்கள் பக்கத்தில் வாக்கு இயந்திரம் தொடர்பான பதில்கள் போதுமான மற்றும் விரிவான அளவிற்கு உள்ளது. 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விவிபாட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், ஏற்கனவே எழுதப்பட்ட கடிதத்திற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதில் கடிதத்தில் வாக்கு எந்திரம், விவிபாட் ஆகியவை குறித்த பல்வேறு சந்தேகங்களை கருத்தில் எடுத்துக் கொண்டு வரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் வரும்போது, சரிபார்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    30-12-2023-ந்தேதி குறிப்பிட்டு எழுதப்பட்ட கடிதத்தில் பதில் அளிக்காத எந்த பிரச்சனை குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பெறும்போது, அது கட்சிக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடுகிறீர்கள்.
    • அதே தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தி சில மாதங்களுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும்போது குறை கூறுகிறீர்கள்.

    வாக்கு எந்திரத்தை குறை கூறாதீர்கள் என காங்கிரஸ் கட்சியை ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வரும், தேசியமாநாடு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதில் பின்வருமாறு:-

    சமாஜ்வாடி கட்சி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் தேர்தல் எந்திரம் குறித்து பேசியுள்ளனர். தயவு செய்து நீங்கள் கூறியது உண்மைதானா? என்பதை சர்பார்க்கவும். காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தில் தேர்தல் ஆணையத்தை பற்றிதான் தெளிவாக கூறியது. வெற்றி பெற்று முதல்வரான பின்னர், எங்கள் பார்ட்னருக்கு ஏன் இப்படி ஒரு அணுமுறை?

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, காஷ்மீர் முதல் மந்திரியான உமர் அப்துல்லா தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் (காங்கிரஸ்) 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை பெறும்போது, அது கட்சிக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடுகிறீர்கள். அதே தேர்தல் இயந்திரத்தைப் பயன்படுத்தி சில மாதங்களுக்கு பிறகு தோல்வியை சந்திக்கும்போது குறை கூறுகிறீர்கள். இத்தகைய அணுகுமுறையை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஏற்காதவர்கள் என்றால் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

    இவ்வாறு உமல் அப்துல்லா கூறியிருந்தார்.

    சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களுக்கு மேல் பிடித்து அமோக வெற்றி பெற்றது.

    அப்போது சரத் பவார், உத்தவ் தாக்கரே கட்சி தலைவர்கள் வாக்கு எந்திரத்தில் மோசடி செய்து பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினர்.

    ×