என் மலர்
நீங்கள் தேடியது "தி குட் ஜெர்மன்"
- நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் விடுமுறையை கொண்டாட கரீபியன் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (வயது 51). தி குட் ஜெர்மன், ஸ்பீடு ரேசர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடத்திருக்கிறார்.
இவர் தனது 2 மகள்களான அன்னிக்(12), மடிதா (10) மற்றும் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட கரீபியன் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதற்கிடையே பெக்லியா தீவில் இருந்து செயின்ட் லூசியாவுக்கு கிறிஸ்டியன் ஆலிவர் தனது 2 மகள்களுடன் தனியாருக்கு சொந்தமான விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
ஒரு எஞ்சின் கொண்ட சிறிய ரக அந்த விமானம் கரீபியன் கடல் மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து நொறுங்கியது. புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் ஆலிவர் அவரது 2 மகள்கள் மற்றும் விமானி ராபர்ட் சாச்ஸ் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்துக்கு கடலோர காவல் படையினர், மீனவர்கள், நீர்மூழ்கி வீரர்கள் சென்று 4 பேரின் உடல்களை மீட்டனர். விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.