search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேம்பஸ் ஆட்சேர்க்கை"

    • நாடு முழுவதும் 23 ஐஐடி மையங்கள் உள்ளன
    • ஐடி நிறுவனங்கள் பெருமளவு பணி சேர்க்கையை குறைத்து விட்டன

    உயர்தர பொறியியல் படிப்பிற்காக உலகம் முழுவதும் பிரபலமானவை நாடெங்கிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT).

    மத்திய கல்வி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இவை ஒவ்வொன்றும் தன்னாட்சி கொண்ட கல்வி மையங்கள்.

    சென்னை உட்பட நாடு முழுவதும் 23 ஐஐடி மையங்கள் உள்ளன.

    ஆண்டுதோறும் 2 கட்டங்களாக ஐஐடி வளாகங்களுக்கு வந்து பன்னாட்டு முன்னணி நிறுவன உயர் அதிகாரிகள் இறுதி ஆண்டு மாணவர்களை தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற நேர்முக தேர்வு நடத்தி தேர்வு செய்வது வழக்கம்.

    "கேம்பஸ் இன்டர்வியூ" என அழைக்கப்படும் இந்த "வளாக நேர்காணல்" முறையில் தேர்வாகும் மாணவர்களுக்கு பெரும் தொகை ஊதியமாக கிடைப்பது வழக்கம்.

    இதன் முதல் கட்டம் டிசம்பர் மாதம் தொடங்கி சில நாட்களில் நிறைவு பெறும். இரண்டாம் கட்டம், ஜனவரியில் தொடங்கி மே வரை நடைபெறும்.

    2024-ஆம் வருட மாணவர்களுக்கு 1-ஆம் கட்ட நேர்முக தேர்வுகள் கடந்த மாதம் நிறைவடைந்தது.

    2024ல், எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக, 2023-ஐ விட பணி நியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.

    இதை ஈடு செய்யும் வகையில் விரைவில் தொடங்க உள்ள இரண்டாம் கட்ட நேர்முக தேர்வுகளில் ஓவ்வொரு ஐஐடியிலும் உள்ள பணி சேர்க்கை அமைப்பினர் (recruitment cell), அதிகளவில் மாணவர்களை பணியில் சேர்த்து விட தீவிரமாக முயன்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் மூலம் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்பை குறித்து தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

    சில ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்ப சேவைக்கான நிறுவனங்கள் புதிய ஊழியர் சேர்க்கையை பெருமளவு குறைத்து விட்டன.

    வளாக சேர்க்கை (campus recruitment) முறையில் பணிகள் கிடைப்பது அரிதாகி விட்டதால் இறுதி ஆண்டு மாணவர்கள் தனித்தனியே மனு போட்டு வெளியில் வேலை தேட துவங்கி விட்டனர்.

    ஐஐடி மாணவர்களுக்கே வேலை வாய்ப்பு குறைந்து வருவது தீவிரமாக பார்க்கப்பட வேண்டிய நிலவரம் என்றும் இந்நிலை தொடர்ந்தால் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் வேலையை ஒப்பு கொள்ள மாணவர்கள் தயாராகி விடலாம் எனவும் சில மனித வள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×