என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனிநபர் கடன்"
- யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி கார் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.
- ரெப்போ வட்டி விகிதத்தின் படி வீட்டுக்கடனுக்கான வட்டித் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
அனைத்து வங்கிகளும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் என பல்வேறு கடன்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கி வருகிறது.இதற்காக குறிப்பிட்ட சதவீதம் வட்டி விதித்து வருகிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் பல வங்கிகள் தனிநபர் கடன், காருக்கான கடன்களின் வட்டி தொகையை அதிகரித்து உள்ளது.பாரத ஸ்டேட் வங்கி கடந்த டிசம்பர் மாதம் வரை காருக்கான கடன் வட்டி சதவீதம் 8.65 ஆக இருந்தது. இது தற்போது 8.85 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
பரோடா வங்கி 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. இதற்கான சேவை கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி கார் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது. கார் கடனுக்கான வட்டி விகிதம் முன்பு 8.75 சதவீதமாக இருந்தது. இது 9.15 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஐ.டி.எப்.சி. வங்கி தான் முதன் முதலாக தனது வட்டி விகிதத்தை உயர்த்தியது. நவம்பர் மாதம் இந்த வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.49 சதவீதமாக இருந்தது. இது 10.75 சதவீதம் ஆக உயர்தப்பட்டு இருக்கிறது.
இதே போல கர்நாடக வங்கியும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 14.21 சதவீதத்தில் இருந்து 14.28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தின் படி வீட்டுக்கடனுக்கான வட்டித் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை. இதனால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் அப்படியே இருந்து வருகிறது.