என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹைப்பர்தைராய்டு"
- தைராய்டு அதிகம் பெண்களிடையே நிலவுகிறது.
- மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது.
தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.
தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.
ஒரு வகையில் மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது. ஒருவேளை இந்த சுரப்பி ஹார்மோன்களை குறைவாகவோ கூடுதலாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்னை உண்டாகிறது.
மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் இது ஹைப்போ-தைராய்டிசம் எனப்படுகிறது. சொல்லப்போனால் பொம்மையில் பேட்டரி தீர்ந்து போனது போலத்தான். ஹைபோ-தைராய்டிசம் வந்தால் மனித உடலில் எந்த அளவு ஆற்றலுடன் இயங்க முடியுமா அதை விடக் குறைவாகவே இயங்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அயர்ச்சி அடைந்துவிடுவார்கள்.
ஒருவேளை தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது ஹைப்பர்-தைராய்டிசம் எனப்படுகிறது. இவர்கள் அதிகளவில் 'காஃபைன் ' எடுத்துக் கொண்டவர்களைப் போன்றவர்கள். அதாவது அதிக பசி, அதிக வியர்வை போன்றவை உண்டாகும்.
மூன்றாவது பாதிப்பு தைராய்டு சுரப்பி வீக்கமடைவது. 'கழுத்துக் கழலை' எனும் இந்த குறைபாடு 'Goiter' என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மருந்துகளால் தீர்க்க முடியாவிட்டால் இதற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை தேவை.
ஹைப்போ-தைராய்டிசம் அறிகுறிகள்:
உடல் பருமன் அடைவது, முகம், கால்கள் ஆகியவை வீக்கமடைவது, சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் உணர்வது, பசி இல்லாமல் போவது, அதீத தூக்க உணர்வு, அதிகமாகக் குளிர்வது போன்ற உணர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் பிரச்னை போன்றவை ஹைப்போ-தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள்.
ஹைப்பர்-தைராய்டிசம் அறிகுறிகள்:
போதுமான அளவு பசியிருந்தும் நல்ல உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல், கை - கால் நடுக்கம், திடீர் திடீரென மனநிலை மாறுவது, கொஞ்சம் வெயில் அடித்தாலும் தாங்கிக் கொள்ள முடியாமல் போவது, உறக்கத்தின்போது மூச்சு சீரற்று இருப்பது, இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, கண் பார்வை மங்குவது, மூளை மூட்டம் உள்ளிட்டவை ஹைப்பர்-தைராய்டிசம் குறைபாட்டின்
அறிகுறிகள். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் போனால் அதைக் கண்டுபிடிக்க, அதற்கென குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் தனியாக இல்லை.
தைராய்டு குறைபாடு உள்ளவர்களில் 10 சதவீதம் பேருக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருக்கும். ஆனால் அவர்களில் பாதி பேருக்குத்தான் அப்படியொரு குறைபாடு இருப்பதே தெரியவருகிறது. ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருக்குமே இதற்கான அறிகுறிகள் ஒன்றாக இருந்தாலும் பெண்களுக்கே விரைவில் இந்த நோய் கண்டறியப்படுகிறது.
வழக்கமாக 80 முதல் 90 சதவீதம் தைராய்டு நோயாளிகள் சிகிச்சைக்குப் பின்பு குணமடைகிறார்கள். ஆனால், சிலருக்கு இது முற்றிலும் குணமாவதில்லை. தைராய்டு பிரச்னை ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் உண்டாகிறது.
T3, T4, TSH ஹார்மோன்கள் - தைராய்டு நோயுடன் என்ன தொடர்பு?
ஹைபோ தைராய்டிசம் என்றால் T3 (ட்ரை-அயோடோதைரோனைன்), T4 (தைராக்சின்) ஆகிய ஹார்மோன்கள் குறையும் என்று பொருள். அதே சமயத்தில் TSH (தைரோட்ரோபின்) ஏனும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பிற ஹார்மோன்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை இந்த ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது என்பதால் இது தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு குறைபாடு இருந்தால் அவர்கள் குழந்தைகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதைத் தடுப்பதற்கு எந்த வழிமுறையும் இல்லை. பிரச்னை உண்டான பின்னரே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.
ஹைப்போ-தைராடிசம் உண்டானால் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் அதிகம் சுரக்கப்படும் என்பதால் இதயத்துடிப்பு விகிதத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் உண்டாகும்.
இதேபோல ஹைப்போ-தைராய்டிசம் சரியான நேரத்தில் கண்டறியப்படவில்லை என்றால் சில நேரங்களில் மூளையில்கூட பிரச்னை உண்டாகும். அது மட்டுமல்லாமல் உடலில் சோடியம் அளவு குறைந்து பாதிக்கப்பட்ட நபர் கோமா செல்வதற்கும் கூட வாய்ப்புண்டு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்