என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஃப்ளிப்கார்ட்"
- 1 வருடத்திற்கும் மேலாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன
- திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் கீழே உள்ளவர்கள் நீக்கப்படுவார்கள்
2020 கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கிய பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் மோசமடைவதால் உலகெங்கிலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இணையவழி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
அதனால் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக அத்துறையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரூவை மையமாக கொண்டு செயல்படும் பிரபல இணையதள வர்த்தக நிறுவனம், ஃப்ளிப்கார்ட் (Flipkart).
2007ல் புத்தகங்களை இணையவழியில் விற்பதற்காக தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட், பிறகு நுகர்வோர் மின்னணு சாதனங்கள், நவீன ஆடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து, பெரும் லாபம் ஈட்டி வந்தது.
இதே துறையில் உள்ள அமெரிக்காவை மையமாக கொண்ட புகழ் பெற்ற அமேசான் நிறுவனத்திற்கு ஃப்ளிப்கார்ட் போட்டியாக இயங்கி வருகிறது.
2018ல் அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு முன்னணி மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை நிறுவனமான வால்மார்ட் (Walmart), ஃப்ளிப்கார்ட் நிறுவன பங்குகளில் 77 சதவீதத்தை விலைக்கு வாங்கியது.
2022-23 நிதியாண்டில் ஃப்ளிப்கார்ட் ரூ.4,890 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக 2023 அக்டோபர் மாதம் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், திறன் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தி அப்பட்டியலில் கீழே உள்ள சுமார் 7 சதவீதம் வரை பணியாளர்களை நீக்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.
பணிநீக்க நடவடிக்கை வரும் ஏப்ரலில் நிறைவடையும்.
புதியதாக பணியாளர்களை சேர்ப்பதை ஃப்ளிப்கார்ட் சில மாதங்களுக்கு முன்னரே நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.