என் மலர்
நீங்கள் தேடியது "காளிபிளவர் ரெசிப்பி"
- தினமும் என்ன டிபம் செய்ய வேண்டும் என்று குழப்பமாக இருக்கும்.
- வித்தியாசமாக காலிஃபிளவர் சப்பாத்தி செய்யலாம் வாங்க.
பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் மாலை என இரண்டு வேலையிலும் இட்லி மற்றும் தோசை என இந்த இரண்டு வகையான ரெசிபிகளை தான் செய்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு நாள் ஏன் ஒரு வேளைக்கு இட்லி மாவு அல்லது தோசை மாவு இல்லை என்றால் என்ன சாப்பாடு செய்வது என்று தெரியாமலே குழப்பத்தில் இருப்பார்கள். அதேபோன்று தினமும் சப்பாத்தியே செய்து சாப்பிட்டு பழகியவர்களுக்காக வித்தியாசமாக காலிஃபிளவர் சப்பாத்தி செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
காலிஃப்ளவர் துருவியது - 1 கப்,
வெங்காயம்- 1 நறுக்கியது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிது.
செய்முறை
பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். கொஞ்சம் தளர்வாக பிசைந்துகொள்ள வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் துருவிய காலி ஃப்ளவர், வெங்காயம், மிளகாய்தூள், சீரகத்தூள், கரம்மசாலாதூள், ஆம்சூர் பவுடர், உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிசைந்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை அளவு எடுத்து சப்பாத்தியாக திரட்டி நடுவில் பூரணத்தை வைத்து மூடி மீண்டும் திரட்டி சூடான தவாவில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். இதனுடன் நெய் அல்லது வெண்ணெய் தேய்த்து சுவைத்தால் இன்னும் அருமையாக இருக்கும். இதனுடன் தயிர், ஊறுகாய் வைத்து சேர்த்து சாப்பிடலாம்.