என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய பிரதேசம் ஐகோர்ட்"
- மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமையே என்பதால் கணவருக்கு விவாகரத்து வழங்கியது ஐகோர்ட்.
- பலரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு பேசுபொருளாகி உள்ளது.
போபால்:
மத்திய பிரதேசத்தில் ஒரு தம்பதிக்கு கடந்த 2006-ல் திருமணம் நடைபெற்றது. கணவர் வெளிநாடு செல்லும் வரை மனைவி உடலுறவுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.
எனவே கணவர் கீழமை நீதிமன்றத்துக்கு போய் தனக்கு விவாகரத்து வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம் கணவருக்கு விவாகரத்து தர மறுத்தது. இதை எதிர்த்து மத்திய பிரதேச ஐகோர்ட்டில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமையே என்பதால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது மத்திய பிரதேச ஐகோர்ட்.
இதுதொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் கூறுகையில், மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும். கணவன் - மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
பலரது கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு பேசுபொருளாகி உள்ளது.