என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாட்டுப் பொங்கல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.

    தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
    • மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகை நேற்று உலகத் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    தை பொங்கலுக்கு மறுநாளாக இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    மக்கள் தங்கள் வாழ்வில் குடும்ப உறுப்பினர்களை போல் வாழும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மாட்டுப் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

     

    மாட்டுப் பொங்கலை ஒட்டி மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து விவசாயிகள், மக்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் மாடு மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்குகள் வளர்ப்பவர்கள் தங்கள் வீடுகளில் இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். உழவுக்கு உயிரூட்டும் கால்நடைகளுக்கு இந்த நாளில் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் இருக்கும்.

    மேலும் உழவுக்கருவிகளுக்கும் பூஜை செய்வார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி, வழிபாடு நடத்தி, பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். இந்த பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் கிராமங்கள் அனைத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அதேநேரம் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    • நந்தியம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.
    • நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலக புகழ் பெற்றது . இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நாள்தோறும் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த கோவிலில் மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலை உள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி 20 டன் எடை கொண்டது. இந்த நந்தியம்பெருமானுக்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மகரசங்கராந்தி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று மகர சங்கராந்தி பெருவிழா நடந்தது.

    இதனை முன்னிட்டு காலையில் நந்தியம் பெருமானுக்கு சுமார் 2 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், சவ்சவ், உருளைக்கிழங்கு, வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய், வெண்டைக்காய் போன்ற அனைத்து வகையான காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா உள்பட பல வகையான பழங்கள், பால்கோவா உள்பட பல்வேறு வகையான இனிப்புகள், பல்வேறு வகையான மலர்களாலும் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 16 வகையான தீபாராதனைகள் காட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நந்தி சிலை முன்பு 108 பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவற்றின் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு கோ-பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோ-பூஜை செய்தனர்.

    பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

    ×