என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்டார்ட் அப்"
- தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன.
- சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.
இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்! என கூறியுள்ளார்.
#StartUp தரவரிசைப் பட்டியலில்,
— M.K.Stalin (@mkstalin) January 17, 2024
கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு,
நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad… https://t.co/hNapJChxvR
- நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன.
- அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவரின் ரெட்டிட் சமூக வலைதள பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் தொழில்முனைவோருக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான தடைகளை மேற்கோள் காட்டி அதிக சம்பளம் வாங்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத இந்த நிறுவனர் u/anonymous_batm_an என்ற ப்ரொபைலில் இந்த பதிவை இட்டுள்ளார். அதில், தான் புகழ்பெற்ற இந்திய பொறியியல் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகவும், பின்னர் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

2018 இல் இந்தியாவுக்குத் திரும்பி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சராசரியாக ரூ. 15 லட்சம் சம்பளத்தில் கிட்டத்தட்ட 30 பேர் பணிபுரியும் அவரது ஸ்டார்ட்அப் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.
ஆனால் நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன. எதையும் செய்ய அதிகாரம், அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களுடன் தொடர்பு தேவை என்று தனது தற்போதைய பதிவில் ஆதங்கப்பட்டுள்ளார்.
அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்தியாவின் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை விமர்சித்துள்ள அவர், மக்கள் சமூக நிலையை செல்வம் மற்றும் தோற்றத்துடன் இணைத்து அதன் அடிப்படையிலேயே ஒருவருக்கு மதிப்பளிக்கும் போக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரமான பொருளாதாரச் சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்று கணித்துள்ள இந்த நிறுவனர் இந்தியாவுக்கு மாற்றாக தொழில்முனைவோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல பரிந்துரைத்துள்ளார்.
சுருக்கமாக சொன்னால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் எண்ணம் இல்லாததால், ஆட்சியாளர்கள் உங்கள் பாப்கார்னுக்கு வரி விதிக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! என்று புலம்பித் தீர்த்துள்ளார்.

கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கான வரியை 5 முதல்18 சதவீதம் வரை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் என்விடியாவின் பங்குகள் 17% வீழ்ச்சியை கண்டன.
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] தொழில்நுட்பத்தின் அமெரிக்க நிறுவங்கள் மட்டுமே வல்லாதிக்கம் செலுத்திவந்த நிலையில் சீன நிறுவனம் புதிய ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக் (Deepseek) அறிமுகப்படுத்தியுள்ள ஏஐ மாடல் அமெரிக்க நிறுவனங்களைக் கதிகலங்க வைத்துள்ளது.
டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஆகியவை பிரீமியம் முறையில் நவீன வசதிகளை வழங்கிவரும் நிலையில், டீப்சீக் ஆர்1 அனைத்து நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

இதனால் சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரிலும் உலகளவிலும் டீப்சீக் செயலி அதிகமான டவுன்லோட்களை கடந்துள்ளது. டீப்சீக் ஏஐ அறிமுகம் பங்குசந்தையிலும்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் நேற்று [திங்கள்கிழமை] பூகம்பத்தை சந்தித்துள்ளன.
என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ ரூ.9.34 லட்சம் கோடி] இழந்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் என்விடியாவின் பங்குகள் 17% வீழ்ச்சியை கண்டன. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 589 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.

டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது. என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் உடைய சொத்துமதிப்பில் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் [20.1 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது.

ஜென்சன் ஹுவாங்
Oracle Corp இணை நிறுவனர் லேரி எலிசன் உடைய சொத்தில் 12 சதவீதம் [22.6 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனங்கள் அதிக செலவு செய்து தயாரித்துள்ள நிலையில் டீப்சீக் நிறுவனம் 6 மில்லியன் டாலர்களில் அதை உருவாகிவிட்டது.
டீப்சீக் உடைய தாக்கம் தொடர்வதால் முதலீட்டாளர்கள் நடுக்கத்தில் உள்ளனர். டீப்சீக் வருகை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.