என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிர்ரா ஆண்ட்ரீவா"

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார்.

    இதில் கோகோ காப் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் யுலியாவை வீழ்த்தி கலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • அமெரிக்க வீராங்கனை கோகோ காப் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை ஆன் லி உடன் மோதினார்.

    இதில் கோகோ காப் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் மேக்டலீனாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 4-6 என இழந்த இகா ஸ்வியாடெக் சுதாரித்துக் கொண்டு அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற செட்கணக்கில் செக் வீராங்கனை மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் பெலாரசைச் சேர்ந்தவரும், நம்பர் 1 வீராங்கனையுமான அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட மிர்ரா ஆண்ட்ரீவா அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    சமீபத்தில் நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் தொடரிலும் மிர்ரா ஆண்ட்ரீவா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரையிறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸை (6-0, 6-1) என்ற செட் கணக்கில் சபலென்கா வீழ்த்தினார்.
    • 24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.

    இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ்- சபலென்கா பலப்பரீட்சை நடத்தினர்.

    இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸை சபலென்கா (6-0, 6-1) என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவருமான இகா ஸ்வியாடெக் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் 17 வயது மிரா ஆன்ட்ரீவா (ரஷ்யா) ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஆன்ட்ரீவா 7-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்வியாடெக் 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். யார் வெற்றியாளர் என தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆன்ட்ரீவா வெற்றி பெற்றார்.

    இதனால் 7-1, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ஆன்ட்ரீவா தகுதி பெற்றார்.

    24 ஆண்டுகளில் இந்தியன் வெல்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இளம் வீராங்கனையாக மிர்ரா ஆன்ட்ரீவா சாதனை படைத்தார்.

    • கவூப் 7-6 (7-2) 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • ரஷியாவை சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள கோகோ கவூப் (அமெரிக்கா) சக நாட்டை சேர்ந்த கரோலின் டோனி ஹைடை எதிர்கொண்டார்.

    இதில் கவூப் 7-6 (7-2) 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டத்தில் மினாவூர், ஹண்டர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    6-வது வரிசையில் இருக்கும் ஒனஸ் ஜபேர் (துனிசியா) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ரஷியாவை சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா வோஸ்னியாக்கியும் (டென்மார்க்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 2-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த ஜெஸ்பர் டி ஜாங்கை எதிர்கொண்டார். இதில் சின்னர் 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்றார்.

    • முதல் அரையிறுதி போட்டியில் அன்ஹெலினா கலினினாவும் போலினா குடெர்மெடோவாவும் மோத உள்ளனர்.
    • 2-வது அரையிறுதியில் சபலென்கா, ஆண்ட்ரீவாவுடன் மோதுகிறார்.

    பிரிஸ்பேன்:

    முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பெண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. இதில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரேனிய வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் ஆஸ்திரேலிய வீராங்கனை கிம்பர்லி பிர்ரெல்லும் மோதின. இதில் அன்ஹெலினா கலினினா 4-6, 6-1, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஆஷ்லின் க்ரூகரும் ரஷ்ய வீராங்கனை போலினா குடெர்மெடோவாவும் மோதினர். இதில் போலினா குடெர்மெடோவா 7-5, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்ற இரண்டு ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-4 என்ற கணக்கில் எம். பௌஸ்கோவாவை வீழ்த்தினார். எம். ஆண்ட்ரீவா 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

     இதன்மூலம் முதல் அரையிறுதி போட்டியில் அன்ஹெலினா கலினினாவும் போலினா குடெர்மெடோவாவும் மோத உள்ளனர். 2-வது அரையிறுதியில் சபலென்கா, ஆண்ட்ரீவாவுடன் மோதுகிறார்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இறுதிச்சுற்றில் டென்மார்க் வீராங்கனை கிளாரா தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 7-6 (7-1), 6-1 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ×