என் மலர்
நீங்கள் தேடியது "தர்ஷன்"
- 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடித்தார்
- தர்ஷன் இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கனா'. அருண்ராஜா காமராஜ் இயக்கிய 'கனா' திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் நடித்த கதாப்பாத்திரம் மூலம் கவனிக்கப்படும் நடிகர் ஆனார்.
கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் தர்ஷன் நடித்து இருந்தார்.
அடுத்ததாக தர்ஷன் இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தை SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இதற்கு முன் கொட்டுக்காளி திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
- இயக்குனர் தமிழ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
'சேத்துமான்' என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குனர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் பேசப்பட்டுள்ளது.

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும் இந்த படத்தில் 'கனா' புகழ் தர்ஷன், 'ஹிருதயம்' தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர். தீபக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இரவு- பகல் என ஒரேக்கட்டத்தில் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படம் குறித்து இயக்குனர் தமிழ் கூறியதாவது, நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமர்சையாக சித்தரிக்கும் படம் இது என்றார்.
- இந்த திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
- இது உண்மை திருமணமா? அல்லது நகை வியாபார கடை விளம்பர படமா ? என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிரபல சினிமா நட்சத்திரங்கள் ரகுல்ப்ரீத்சிங் - ஜாக்கி பக்னானி, புல்கித் சாம்ராட் - கிருத்தி கர்பண்டா ,மற்றும் டாப்ஸி பன்னு - பாட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ உள்ளிட்டோர்,
கடந்த சில மாதங்களில் காதல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் சித்தார்த் - அதிதிராவ் ஜோடியினர் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்,
இந்நிலையில் தமிழ் நடிகர் தர்ஷன் மற்றும் அவருடன் நடித்த அஞ்சு குரியன் ஜோடி காதலித்து வருவதாக கூறப்படுகிறது. "கனா" படம் வெற்றி மூலம் சிறந்த நடிகராக தர்ஷன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

"இக்லூ" படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற அஞ்சு இருவரும் ரகசிய திருமணம் செய்ததாக வதந்தி பரவி வருகிறது. இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
இந்த திருமண படங்களில், தர்ஷன் ஒரு கிரீம் சட்டை மற்றும் வேட்டி அணிந்துள்ளார். அஞ்சு சிவப்பு மற்றும் தங்கநிற சேலை அணிந்துள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் பங்கேற்றதாகவும் செய்தி பரவியது.
மேலும் இது நகை பிராண்ட் விளம்பர படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.

இந்த புகைப்படங்களுக்கு பின் உள்ள உண்மை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து ஊகிக்கிறார்கள். மேலும் இவர்களிடமிருந்து உறுதிப்படுத்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இது உண்மை திருமணமா? அல்லது நகை வியாபார கடை விளம்பர படமா ? என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் தர்ஷன் - அஞ்சு உண்மை காதலர்கள் போன்று பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து சுற்றி வருவதாக கூறப்படுவதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஷ்வர்யா நடிப்பில் வெளியான கனா படத்தில் தர்ஷன் நடித்து பிரபலாமானார்.
- குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்றார்.
2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஷ்வர்யா நடிப்பில் வெளியான கனா படத்தில் தர்ஷன் நடித்து பிரபலாமானார். ஒத்தயடி பாதியில் பாட்டின் மூலம் மக்களுக்கு பரிட்சையமாகினார். அதைத் தொடர்ந்து 2019 ஆண்டு வெலிவந்த தும்பா படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்றார். அஜித் நடித்த துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தர்ஷனுடன் ஆர்ஷா சந்தினி பைஜு இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன் மலையாள திரைப்படமான முகுந்த உன்னி அசோசியேட்ஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் காளி வெங்கட், வினோதினி வைத்தியனாதன் மற்றும் KPY 2 தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
தற்பொழுது தர்ஷனின் அடுத்த படத்திற்கான பூஜை விழா நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதை அறிமுக இயக்குனரான ராஜ்வேல் இயக்கவுள்ளார். பிரேமம் திரைப்படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பிலே ஸ்மித் ஸ்டூடியோஸ், விவா எண்டர்டெயின்மண்ட் மற்றும் சவுத் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போலீசார் அவரை பெங்களூரு அழைத்து வருவதாக தகவல்.
- உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது.
கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கன்னடா திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தர்ஷன் தூகுதீபா கைது செய்யப்பட்டதை பெங்களூரு காவல் துறை துணை ஆணையர் கிரிஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த தகவலையும் அவர் வழங்கவில்லை.
மைசூருவில் உள்ள சம்ராஜேந்திரா விலங்கியல் பூங்கா அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து போலீசார் அவரை பெங்களூரு அழைத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேனுகாசுவாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேருடன் நடிகர் தர்ஷனுக்கு பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரேனுகாசுவாமியின் சடலம் பெங்களூருவை அடுத்த காமாக்ஷிபாளையத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
- தலையாமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் உள்ள முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியுள்ளது. தர்ஷன் தனது காதலி பவித்ரா கௌடாவுடன் மேலும் 11 பேரை இணைத்துக்கொண்டு இந்த கொலையை அரேங்கேற்றியுள்ளதாக கூறபடுகிறது. கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமியின் உடல் பெங்களூரு காமாட்சிபாளையா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது முந்தைய நாள் இரவில் இரண்டு கார்கள் அங்கிருந்து சென்றது பதிவாகியிருந்தது. பின்னர் அதில் இரண்டாவது கார் நடிகர் தர்ஷனுடையது என்று கண்டறியற்பட்டது. முதலாவதாக சென்றது ஒரு டாக்ஸி ஆகும். அந்த டாக்ஸியிலேயே ரேணுகா சுவாமியின் உடல் அந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் அந்த டாக்ஸியை ஓட்டி வந்த டிரைவர் ரவி தற்போது போலீசில் சரணடைந்துள்ளார். தர்சன் கைது செய்யப்படும் தலைமறைவான ரவி, டாக்ஸி ஊழியர்கள் சங்கத்தின் அறிவுரையை ஏற்று தற்போது சரணடைந்துள்ளதாக தெரிகிறது.
டாக்ஸி டிரைவர் ரவியின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் தர்ஷன் கொலைப் பழியை ஏற்கும் படி வேறு ஒருவருக்கு அதிக பணம் அளிக்க முயன்றுள்ளார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- கொலைக்கு பயன்படுத்திய புனித்தின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
- அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ரேணுகாசாமி. இவர், நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த 8-ந் தேதி நடிகர் தர்ஷனை பார்க்க அழைத்து செல்வதாக கூறி ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு காரில் கடத்தி வந்தனர். பின்னர், அவரை பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் அருகே பட்டணகெரேயில் உள்ள ஒரு கார் ஷெட்டில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அதே பகுதியில் உள்ள பாலத்தின் அருகே வீசி சென்றனர்.
இந்த கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், அவரது தோழியான நடிகை பவித்ரா உள்பட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த நடிகர் தர்ஷனின் ஆதரவாளர்கள் 2 பேர் ரேணுகாசாமியின் உடலை எடுத்து சென்றதும் இதற்காக புனித் என்பவரின் காரை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து புனித்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய புனித்தின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புனித் நேற்று கைது செய்யப்பட்டார். அதுபோல், ரேணுகாசாமி கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக ஹேமந்த் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த கொலையில் தனது பெயர் வெளியே தெரியாமல் இருக்க நடிகர் தர்ஷன் தனது கூட்டாளிகள் 4 பேருக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுத்து போலீசில் சரணடைய செய்தார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. மேலும் ரூ. 30 லட்சம் பணத்துக்காக நடிகர் தர்ஷனை காப்பாற்ற இவர்கள் போலீசில் சரணடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் தனியாக வேறு வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே தனது கூட்டாளிகள் 4 பேருக்கு தர்ஷன் கொடுத்த ரூ. 30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் தர்ஷனுக்கு ஆதரவாக கர்நாடக மந்திரி ஒருவர் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அம்மாநில போலீஸ் மந்திரி பரமேஸ்வரா மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ரசிகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு போலீசார் எந்த சலுகையும் அளிக்கவில்லை. மற்றவர்களை போலவே தர்ஷனும் போலீஸ் நிலையத்தில் நடத்தப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போலீசார் பிரியாணி கொடுத்ததாக கூறுவது தவறு. தர்ஷனை காப்பாற்ற யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது. எனவே ஆதாரம் இல்லாமல் வெளியாகும் தகவல்கள் பொய்யானது. நடிகர் தர்ஷனுக்கு எந்த ராஜ உபச்சாரமும் நடைபெற வில்லை. திட்டமிட்டே இது பரபரப்ப படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகையும், தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு அருவறுக்கத்தக்க வகையிலான மெசேஜ்.
- கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு உடலை மறைவான இடத்தில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா. நடிகையான பவித்ரா கவுடா இவருக்கு தோழியாவார். இவருக்கு தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி அருவெறுப்பான வகையில் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ரேணுகாசுவாமியை திட்டமிட்டு தர்ஷன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தர்ஷன் மற்றும் மேலும் பலரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிறப்பு பொது வழக்கறிஞரான (SPP) பிரசன்னா குமார் தர்ஷன் தொடர்பான வழக்கின் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் காவலில் எடுக்க வேண்டுகோள் வைக்கவில்லை. இதனால் தர்ஷன் உள்பட பிரதோஷ், வினய், தன்ராஜ் ஆகிய நான்கு பேரை பரப்பன அக்ராஹர மத்திய சிறையில் ஜூலை 4-ந்தேதி வரை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 4-ந்தேதி நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதுவரை சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தர்ஷன் கடந்த 11-ந்தேதி 33 வயதான ரேனுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். தர்ஷன் 30 லட்சம் ரூபாய் கொடுத்து ரேனுகாசுவாமியை கொலை செய்து, அவரது உடலை அப்புறப்படுத்தவும், ஆதாரங்களை அழிக்கவும் சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சில குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ரேணுகாசுவாமி மரக்கட்டைகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக உடல்பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனர்.
- தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவெறுப்பான மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
- இதனால் தர்ஷன் திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.
கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு மோசமான வகையில் மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.
போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 15 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதனால் பவித்ரா கவுடாவை தர்ஷனின் மனைவி எனக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் விஜயலட்சுமிக்கு கூறியிருப்பதாவது:-
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நீங்கள் தவறாக அறிக்கையை கொடுத்துள்ளீர்கள். பவித்ரா தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த தவறு கர்நாடகா உள்துறை மந்திரி மற்றும் தேசிய மீடியாக்கள் தொடர்ந்து செய்தது. ரேணுகாசுவாமி கொலை வழக்கில் தர்ஷன் தம்பதி கைது என கூறப்பட்டு வருகிறது.
இது எதிர்காலத்தில் தனக்கும் தன்னுடைய மகன் வினீஷ் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பவித்ரா கவுடா சஞ்சய் சிங்கை திருமணம் செய்துள்ளார். அவர்களுடைய மகள் அவருடன் இருக்கிறார். இந்த உண்மைகள் போலீஸ் பதிவுகளில் துல்லியமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டம் அதன் கடமையை செய்யும் என நம்புகிறேன். பவித்ரா என்னுடைய கணவரின் தோழி என்பதுதான் உண்மை. அவர் மனைவி அல்ல. நான் மட்டும்தான் சட்டப்பூர்வமாக தர்ஷனை திருமணம் செய்து கொண்டேன். எங்களுடைய திருமணம் 2023-ம் ஆண்டு மே மாதம் தரம்சாலாவில் நடைபெற்றது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார்.
- சிறை வளாகத்தில் சேர் போட்டு, கையில் சிகரெட் மற்றும் காப்பி குவளையுடன் தர்ஷன் அமர்ந்துள்ளார்.
கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார். போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் தர்ஷன் சிறை வளாகத்துக்குள் கையில் சிகரெட் மற்றும் காப்பி குவளையுடன் தனது மேலாளர் மற்றும் இரண்டு சிறை நண்பர்களுடன் சொகுசாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சிறையில் இதுபோன்ற வசதிகளா? அதிகாரிகள் துணை இன்றி இது நடக்க சாத்தியமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடகா சிறைத்துறை டிஜிபி மாலினி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் தர்ஷன் சிறைக்குள் இருந்தபடி வீடியோ காலில் பெரும் காணொளி வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில் திரைத் துணியால் மறைக்கப்பட்டு சிறை அறையில் மஞ்சள் டீ-சர்ட் அணிந்து அமர்ந்திருக்கும் தர்ஷன், நபர் ஒருவருடன் பேசும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
- ஒரு கையில் டீ கப்பும், மற்றொரு கையில் சிகரெட் வைத்திருப்பது போல் நாற்காலியில் நடிகர் தர்ஷன் அமர்ந்துள்ளார்.
- 3 பேருடன் நடிகர் தர்ஷன் சிரித்து பேசியபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 மாதமாக சிறைவாசம் அனுபவிக்கும் அவர், இதுவரை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரத்தில் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தர்ஷன் வீட்டு உணவு, படுக்கை விரிப்பு கேட்டு கர்நாடக ஐகோர்ட்டு, சிறைத்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நடிகர் தர்ஷனுக்கு மற்ற கைதிகள் போல சிறை உணவு வழங்கப்படுவதாகவும், எந்த சொகுசு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபடி ரவுடியுடன் சேர்ந்து சிகரெட் புகைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதாவது ஒரு கையில் டீ கப்பும், மற்றொரு கையில் சிகரெட் வைத்திருப்பது போல் நாற்காலியில் நடிகர் தர்ஷன் அமர்ந்துள்ளார். அவருடன் பிளாஸ்டிக் நாற்காலியில் தர்ஷனின் மேலாளர் நாகராஜ், பிரபல ரவுடி வில்சன் கார்டன் நாகா, மற்றொரு கைதி அமர்ந்துள்ளனர். அவர்கள் 3 பேருடன் நடிகர் தர்ஷன் சிரித்து பேசியபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
சிறையில் கைதிகள் பீடி, சிகரெட் உள்ளிட்டவை புகைக்க அனுமதி கிடையாது. அப்படி இருந்தும் கொலை வழக்கில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி டீ குடித்து கொண்டே சிகரெட் புகைப்பதுடன், ரவுடியுடன் ஜாலியாக பேசிக் கொண்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், நடிகர் தர்ஷனுக்கு சலுகை வழங்கியதில் தொடர்புடைய 7 அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு கடுமையான பாதுகாப்பு குறைபாடு என்று அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
- இதுவரை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை.
- சிகரெட் புகைக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியை கொலை செய்ததாக பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் அவர், இதுவரை ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை.
அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரத்தில் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தர்ஷன் வீட்டு உணவு, படுக்கை விரிப்பு கேட்டு கர்நாடக ஐகோர்ட்டு, சிறைத்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நடிகர் தர்ஷனுக்கு மற்ற கைதிகள் போல சிறை உணவு வழங்கப்படுவதாகவும், எந்த சொகுசு வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தபடி ரவுடியுடன் சேர்ந்து சிகரெட் புகைக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை வழக்கில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தர்ஷன், நாற்காலியில் அமர்ந்தபடி டீ குடித்து கொண்டே சிகரெட் புகைப்பதுடன், ரவுடியுடன் ஜாலியாக பேசிக் கொண்டு இருக்கும் புகைப்படம் வெளியானது பேசு பொருளாகி உள்ளது. இது தொடர்பாக சிறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சிறையில் சொகுசு வசதிகளை அனுபவித்து வந்த நடிகர் தர்ஷனை பெல்லாரி சிறைக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தர்ஷனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்ட புகைப்படங்கள் வெளியான நிலையில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதே போன்று, புகைப்படங்களில் தர்ஷன் உடன் இருந்த மற்ற கைதிகளையும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.